தருமபுரியை அடுத்த நார்த்தம்பட்டி கிராமத்தில் கிராம மக்கள் ஒரே இடத்தில் திரண்டு பொங்கலிட்டனர். 
வாழ்வியல்

தருமபுரியில் விநோத வழக்கம்: கிராம மக்கள் ஒரே இடத்தில் பொங்கல் வழிபாடு!

செய்திப்பிரிவு

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே தை முதல் நாளில் 400 குடும்பங்கள் ஒன்றிணைந்து பொங்கலிட்டு, பொங்கல் விழாவை கொண்டாடினர்.

நல்லம்பள்ளி ஒன்றியம் நார்த்தம்பட்டி கிராமத்தில் பொங்கல் விழாவின்போது தை முதல் நாள் மாலையில் சுமார் 400 குடும்பத்தினர். ஒன்றிணைந்து ஒரே இடத்தில் சூரியனுக்கு பொங்கலிட்டு பூஜை செய்து படவேட்டம்மனை வழிபடும் விநோத வழக்கம் பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது.

அந்த வரிசையில், நேற்று முன்தினம் நார்த்தம்பட்டி கிராம மக்கள் வழக்கமாக பொங்கலிடும் பகுதியில் திரண்டு பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். நேர்த்திக் கடன் வேண்டுதல் உள்ளவர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு உறவினர், நண்பர்களுக்கு அசைவ விருந்து படைத்து மகிழ்ந்தனர். இந்த விநோத பொங்கல் நிகழ்ச்சியால் நார்த்தம்பட்டி கிராமம் நேற்று முன்தினம் விழாக்கோலத்தில் காட்சியளித்தது.

SCROLL FOR NEXT