ஒட்டன்சத்திரம்: முருங்கைக்காயின் ரகசியத்தை சொல்லிக் கொடுத்த எனது பாட்டிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என ஒட்டன்சத்திரத்தில் நடிகரும், இயக்குநருமான கே.பாக்யராஜ் பேசினார். ஒட்டன்சத்திரம் கேதையறும்பு அருகே உள்ள கே.கோட்டையில் தனியார் முருங்கை சார் உணவுப் பொருட்கள் உற்பத்திக் கூட நிகழ்ச்சியில் நடிகரும், இயக்குநருமான கே.பாக்யராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசியதாவது: நான் சிறுவனாக இருந்தபோது முருங்கைக்காயின் ரகசியங்களை எனது பாட்டி மூலம் அறிந்து கொண்டேன். அப்போதே, நமக்கு எதிர்காலத்தில் திரைப்பட வாய்ப்பு கிடைக்கும்போது முருங்கைக்காயை பயன்படுத்த வேண்டும் என்று நினைத்திருந்தேன். முந்தானை முடிச்சு படத்தில் பயன்படுத்தினேன். முருங்கைக்காய் காட்சி உலகம் முழுவதும் மக்களின் மனதில் இடம் பிடித்தது.
பெண்கள் காய்கறி கடையில் முருங்கைக்காய் என்று கூறு வதற்கு வெட்கப்பட்டு, அந்த காய் கொடுங்கள் என்று கேட்டார்கள். கடைக்காரர்கள் எந்த காய் என கேட்டவுடன், பாக்யராஜ் காய் கொடுங்கள் என்று கேட்டு வாங்கிச் சென்றனர். முருங்கைக்காயால் எனது பெயர் உலகளவில் பரவியது. முருங்கைக்காய் ரகசியத்தை சொல்லிக் கொடுத்த எனது பாட்டிக்குத் தான் நன்றி தெரிவிக்க வேண்டும்.
பாட்டிகளின் அனுபவ பாடங்களை நமக்கு சொல்லி கொடுத்தாலும் அதை சில நேரங்களில் தவற விட்டுவிட்டோம். அதனால்தான் தற்போது மனிதனுக்கு பல்வேறு நோய்கள் வந்து கொண்டி ருக்கிறது. முருங்கையில் தயாரிக் கப்படும் உணவுகளை சாப்பிட்டு நோயின்றி 100 ஆண்டுகள் வாழுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.