வாழ்வியல்

வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் கண்ணாடி மணிகள், சுடுமண் பொம்மைகள் கண்டெடுப்பு

இ.மணிகண்டன்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் தொடங்கிய 3-ம் கட்ட அகழாய்வில் இன்று உடைந்த நிலையில் சுடுமண் உருவ பொம்மை, கண்ணாடி மணிகள், பழங்கால செங்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

வெம்பக்கோட்டையில் கடந்த 5 ஆயிரம் ஆண்டு நுண் கற்காலத்தை அறியும் வகையில் வைப்பாற்றின் வடகரையில் 3-ம் கட்ட அகழாய்வு பணி நேற்று தொடங்கியது. 3 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டு அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வரும் நிலையில், 2-ம் நாளான இன்று நடைபெற்ற அகழாய்வில், உடைந்த நிலையில் சுடுமண் உருவ பொம்மை, 20-க்கும் மேற்பட்ட கண்ணாடி மணிகள், பழங்கால செங்கற்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மேலும், அகழாய்வில் செங்கற்கள் குவியலும் தென்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த பகுதியில் செங்கல் கட்டுமானம் கிடைக்கப்படும் எனவும் தொன்மையான மனிதர்களின் வாழ்விட பகுதியாக இருக்கலாம் எனவும் தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT