வாழ்வியல்

காமன்வெல்த் 2018: ஹரியாணாவிலிருந்து சீறிய தோட்டாக்கள்!

எல்.ரேணுகா தேவி

ண்மையில் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடந்து முடிந்த காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா பதக்கப் பட்டியலில் 3-ம் இடத்தைப் பிடித்தது. 26 பேர் தங்கப் பதக்கம் வென்றார்கள். அதில் இரண்டு தங்கப் பதக்கங்கள் சிறப்பானவை. அந்த இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றவர்கள் பதின் பருவத்தினர். ஒருவர் 15 வயதான அனிஷ் பன்வாலா, இன்னொருவர் 16 வயதான மனு பாகர். இருவருமே ஹரியாணாவைச் சேர்ந்தவர்கள்.

அனிஷ் பன்வாலா

25 மீட்டர் ரேபிட் பிஸ்டல் பிரிவில் பங்கேற்றுதான் அனிஷ் பன்வாலா தங்கப் பதக்கம் பெற்றார்.

காமன்வெல்த் போட்டியில் இந்திய அளவில் இளம் வயதில் தங்கப்பதக்கம் வென்றவர் இவரே.

காமன்வெல்த் போட்டிகளில் 1998-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியா சார்பில் பங்கேற்ற மிகவும் இளையவர் அனிஷ். 20 ஆண்டுகளுக்கு முன்பு இதே சாதனையைச் செய்த இன்னொருவர் அபிநவ் பிந்த்ரா.

விளையாட்டுப் பின்னணி இல்லாத குடும்பத்திலிருந்து வந்தவர்.

இந்தியாவின் சார்பில் துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் அனிஷ் 2017-ம் ஆண்டிலிருந்துதான் பங்கேற்று வருகிறார்.

2013-ம் ஆண்டுவரை பென்டத்தலான் (pentathlon events) போட்டிகளில் பங்கேற்றுவந்தார் அனிஷ்.

துப்பாக்கியைக் கடன் வாங்கிதான் முதன் முதலில் பயிற்சியை மேற்கொண்டார் அனிஷ்.

2017-ல் ஜெர்மனியில் நடைபெற்ற சர்வதேசத் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் 2 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் எனப் பதக்கங்களைப் பெற்று 14 வயதில் சர்வதேச கவனத்தை ஈர்த்தார்.

. அவருடைய சகோதரி முஷ்கனும் துப்பாக்கி சுடும் வீராங்கனைதான்.

சர்வதேசத் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இளம் வயதில் தங்கப் பதக்கம் வென்ற மனுபாக்கரின் சாதனையை காமன்வெல்த் போட்டியில் பெற்ற தங்கத்தின் மூலம் அனிஷ் முறியடித்துள்ளார்.

மனு பாகர்

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற சர்வதேசத் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டர் பிரிவில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்ற முதல் இந்திய இளம் வீராங்கனை இவர்.

துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் கலந்துகொள்வதற்கு முன்பு தற்காப்புக் கலை, குத்துச்சண்டை, டேபிள் டென்னிஸ் ஆகிய போட்டிகளில் பங்கேற்றுப் பதக்கங்களை வென்றவர்.

2017-ல் ஆசிய அளவில் நடைபெற்ற ஜூனியர் துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் பங்கேற்று முதன்முறையாக சர்வதேச அளவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

2017-ல் கேரளாவில் நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டிகளில் 9 தங்கப் பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்தவர் மனு.

மெக்சிகோவில் நடந்த சர்வதேசத் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் மனு 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இளம் இந்திய வீராங்கனை.

இதே தொடரில் குழு பிரிவில் ஓம் பிரகாஷ் மித்ரவாலுடன் இணைந்து இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்றார் மனு.

காமன்வெல்த் போட்டியின் இறுதிச்சுற்றில் 240.9 புள்ளிகள் எடுத்து புதிய சாதனை படைத்திருக்கிறார் இவர்.

SCROLL FOR NEXT