வாழ்வியல்

போக்குவரத்து சிக்னலில் கிடைத்த நேரத்தில் யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாரான சொமோட்டா டெலிவரி இளைஞர்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியப் போட்டித் தேர்வுகளிலேயே மிக முக்கியமானதும் அதே சமயம் மிக மிகக் கடினமான தேர்வு என்பது யுபிஎஸ்சி தேர்வுதான். அத்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு மாணவர்கள் ஒரு நாளைக்கு பல மணி நேரம் என ஆண்டு கணக்கில் படிப்பது வழக்கம்.

இந்தச் சூழலில், சொமேட்டா உணவு டெலிவரி செய்யும் இளைஞர் ஒருவர், சாலை போக்குவரத்து நெரிசலின்போது கிடைத்த சில நிமிட இடைவெளியில் யுபிஎஸ்சி தேர்வுக்கு தயராகும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. தன்னுடைய வாகனத்தின் முன்பகுதியில் மொபைல் போனை அந்த சொமேட்டா டெலிவரி இளைஞர் பொருத்தி இருந்தார். சிக்னல் காரணமாக வாகனங்கள் வரிசையில் நின்றுகொண்டிருந்தன. இந்த இடைவெளியில், யுபிஎஸ்இ தேர்வுக்கான வகுப்புகளை தன் மொபைல் மூலம் அந்த இளைஞர் பார்க்க ஆரம்பித்தார்.

ஊக்கம் தரும்: இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. வீடியோவை பார்த்த பலரும் அந்த இளைஞரின் கடின உழைப்பைப் பாராட்டி வருகின்றனர். யுபிஎஸ்சி தேர்வுக்கு பயிற்சி வழங்குபவரான ஆயுஷ் சாங்கி என்பவர் அந்த இளைஞரின் வீடியோவைப் பகிர்ந்து, “கடினமாக உழைப்பைச் செலுத்திப் படிப்பதற்கு இதைவிடவும் வேறு எதுவும் ஊக்கமளிக்க முடியாது” என்று பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT