வாழ்வியல்

அடிக்கடி உண்ணாவிரதம் இருந்தால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது: மருத்துவர்கள் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

சிகாகோ: உடல் பருமனை குறைக்க நாளொன்றுக்கு 16 மணிநேரம் வரை உண்ணாவிரதம் இருந்து விட்டு மீதமுள்ள 8 மணிநேரத்தில் சாப்பிடுவது சமீபமாகப் பரவலாகி வருகிறது.

இதுபோன்று நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்துவிட்டு 8 மணிநேரத்துக்குள் மட்டுமே சாப்பிடும் முறையை பின்பற்றுவோறுக்கு 91% வரை இதய நோய்கள் தாக்கி அதனால் மரணம் கூட ஏற்படலாம் என்று ‘தி அமெரிக்கன் இதய கூட்டமைப்பு’ மருத்துவ ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. சீனாவின் ஷாங்காய் ஜியோ தாங் பல்கலைக்கழக மருத்துவத் துறை ஆராய்ச்சியாளர் விக்டர் ஜாங் தலைமையிலான குழு அமெரிக்காவில் இந்த ஆய்வை மேற்கொண்டது. அவர் இது பற்றி கூறியதாவது:

அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் மூலம் தேசிய ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து சோதனை ஆய்வு திட்டத்தின்கீழ் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 18 வயது பூர்த்தியான 20 ஆயிரம் பேரிடம் அவர்கள் கடந்த இரண்டு நாட்கள் என்ன உட்கொண்டார்கள் என்கிற தகவல் முதலில் சேகரிக்கப்பட்டது. இதுபோக கடந்த 2003-ம் ஆண்டிலிருந்து 2019-ம் ஆண்டுவரை அமெரிக்காவில் நேர்ந்த மரணங்களுக்கான காரணங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இந்த ஆய்வில், 8 மணிநேரத்துக்கு மட்டும் சாப்பிட்டுவிட்டு மற்ற வேளைகளில் உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு இதயநோய்கள் உண்டாகி அதனால்மரணம் நிகழும் அபாயம்இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT