திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோழர்கால கல்வெட்டு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அடுத்த நாயுடுமங்கலம் அருகே கொளக்கரவாடி கிராமத்தில் வரலாற்று ஆய்வாளரும் ஆரணியைச் சேர்ந்த தலைமை ஆசிரியருமான ஆர்.விஜயன், ஆசிரியர் கே.அரு ணாச்சலம் மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது, பாறையில் இருந்த கல்வெட்டை ஆய்வுக்கு உட் படுத்தினர். இதில், ராஜேந்திர சோழனின் மூன்றாம் மகனான வீர ராஜேந்திரன் கால கல்வெட்டு என்பது தெரிய வந்துள்ளது.
இது குறித்து வரலாற்று ஆய்வாளர் ஆர்.விஜயன் கூறும்போது, “திருமகள் அருளுடன் செங்கோல் ஏந்திய என்று தொடங்கும் சோழர்களது மெய்க்கீர்த்தி போலவே இக்கல்வெட்டும் தொடங்கி எழுதப்பட்டிருக்கிறது. சோழநாட்டு ஆட்சி பிரிவின் ஒரு அதிகாரியான ஜெயங்கொண்ட சோழ விழுப்பரையன் என்பவ ரால் இக்கல்வெட்டு செதுக்கப் பட்டுள்ளது. இது கொளக்கரவாடி கிராமத்தின் வடமேற்கில் உள்ள ஒரு பாறையின் மீது உள்ளது” என்றார்.
இக்கல்வெட்டு குறித்து கல்வெட்டு ஆய்வாளர் திருச்சி வே.பார்த்திபன் கூறும் போது, “சோழநாட்டு மன்னன் வீர ராஜேந்திரன் என்பவர், மேலை சாளுக்கிய அரசரான ஆக வமல்லனை கூடல் சங்கமம் என்ற இடத்தில் நடந்த பெரும்போரில் வென்றவர். மேலும், அப்போரில் ஆகவமல்லனை புறமுதுகிட்டு ஓடச் செய்ததோடு, அவரது படையின் ஆயுதங்களையும், விலை உயர்ந்த பொருட்களையும், தேர் உள்ளிட்ட வாகனங்களையும் வீரராஜேந்திரன் கைப்பற்றினார் என இக்கல்வெட்டு புகழ்கிறது.
ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து பெண்ணை நதிக்கு வடக்கில் உள்ள, வாண கோவரையர்களின் ஆட்சிப் பகுதியில் அமைந்தது குளம்பற் பாடி கிராமம். இந்த ஊரை பங்கள நாட்டில் இருந்த பதியூர் என்ற இடத்தின் அதிகாரியாக விளங்கிய ஜெயங்கொண்ட சோழ விழுப்பரையன் என்பவர் தானம் அளித்ததற்காக கல் வெட்டினை செதுக்கியுள்ளார். கல்வெட்டானது, வீரராஜேந்திரன் ஆட்சியேற்ற ஆறாவது ஆண்டில், அதாவது 1063-ல் பொறிக்கப்பட் டுள்ளது. மேலும், இதில் இடம்பெறும் குளம்பற்பாடி என்ற இடமானது கொளக்கரவாடி என திரிந்து விளங்குகிறது என்பது குறிப்பிடத் தக்கது” என்றார்.