வாழ்வியல்

தேங்காய் நார், பனை ஓலையில் ‘பட்டாபிஷேக’ ராமர்! - புதுச்சேரி அரசு பள்ளி மாணவி அசத்தல்

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: இயற்கையான தேங்காய் நார், பனை ஒலை உள்ளிட்ட பொருட்களால் புதுச்சேரி அரசு பள்ளி மாணவி பட்டாபிஷேக ராமரை உருவாக்கியுள்ளார்.

புதுச்சேரி கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் மாணவிகளுக்கு வாரம்தோறும் கைவினை பயிற்சி அளிக்கப்படுகிறது.அப்படி பயிற்சி பெற்ற 9ஆம் வகுப்பு மாணவி சௌமியா என்ற மாணவி பட்டாபிஷேக ராமரை உருவாக்கியுள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், “இயற்கையாக கிடைக்க கூடிய தேங்காய் நார், பனை ஓலை, குருமி, சோளக்கதிர் ஆகியவற்றை கொண்டு எவ்வித செலவின்றி ராமர், லட்சுமணன், சீதை, ஆஞ்சநேயர் ஆகியோரை கொண்ட பட்டாபிஷேக ராமர் சீதா, லட்சுமணன் ஆஞ்சநேயரை வடிவமைத்தேன்.

அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதை நினைவுகூரும் வகையில் இப்படைப்பை உருவாக்கினேன்” என்றார். மாணவி உருவாக்கிய கலைப்பொருளை பள்ளி முதல்வர் மோகன் பிரசாத், நுண்கலை ஆசிரியர் உமாபதி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT