வாழ்வியல்

மதுவுக்கு அடிமையான தந்தை, ஏழ்மையுடன் போராடி 19 வயதில் பஞ்சாயத்து தலைவராகி பெண் சாதனை @ ராஜஸ்தான்

செய்திப்பிரிவு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம், சக்தாரா கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவினா. இவரது தந்தை மது பழக்கத்துக்கு அடிமையானவர். இவருடன் 4 சகோதர, சகோதரிகளும் வீட்டில் இருந்தனர். குடும்பம் ஏழ்மையில் வாடியதால், பிரவினா 3-ம் வகுப்புடன் பள்ளி கல்வியை நிறுத்திவிட்டு, கால்நடைகள் மேய்க்கும் தொழிலுக்கு சென்றார்.

இரண்டு ஆண்டுகள் கழித்து இவரது கிராமத்திலிருந்து 40 கி.மீ தொலைவில் கஸ்தூரிபாய் பாலி வித்யாலயா என்ற பெண்களுக்கான உண்டு உறைவிட பள்ளியில், தொண்டு நிறுவன உதவியுடன் மீண்டும் பள்ளியில் சேர்ந்து பிரவினா படித்தார். இங்கு படிக்கும்போதே தந்தை இறந்து விட்டார்.

பள்ளிப் படிப்பை முடித்ததும், மைனராக இருக்கும்போதே, கட்டிட தொழிலாளிக்கு பிரவினாவை மணம் முடித்து கொடுத்தனர். கணவர் குடும்பத்தில் அதிகம் படித்த பெண்ணாக பிரவினா திகழ்ந்தார். இந்த தைரியத்தால் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 2014-ம் ஆண்டு பிரவினா போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். அப்போது அவருக்கு வயது 19. ரூபாவாஸ், கெர்லா, முலியாவாஸ், ராநகர், சேவ்ரா கி தானி, மூலா ஜி கி தானி மற்றும் நாரு ஜி கி தானி ஆகிய கிராமங்களுக்கு இவர் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை பஞ்சாயத்து தலைவராக இருந்தார்.

உள்ளாட்சி நிர்வாக பட்ஜெட்டில் அதிகத் தொகையை கல்விக்குஒதுக்கினார். பள்ளி படிப்பைகைவிடும் பெண்கள் பற்றி கேள்விப்பட்டால், உடனே அங்கு சென்றுஅவர்களது பெற்றோருடன் பேசிதொண்டு நிறுவனங்கள் உதவியுடன் அவர்களுக்கு கல்வி கிடைக்கவழி செய்து வருகிறார். பிரவினாவை அவரது கிராமத்தினர் அன்புடன் ‘பபிதா’ என அழைக்கின்றனர். தற்போது இவர் பெண்களுக்காக தனி பள்ளிக்கூடம் கட்டிகொடுத்துள்ளார். பஞ்சாயத்து தலைவர் பதவிக் காலம் முடிந்தாலும், நல்ல விஷயங்களுக்கான எனது போராட்டம் தொடரும் என்று உறுதியாக கூறுகிறார்.

SCROLL FOR NEXT