வெ.இறையன்பு | கோப்புப் படம் 
வாழ்வியல்

“மனிதர்கள் இடையேயான உரையாடல் குறைந்துவிட்டது” - வெ.இறையன்பு கவலை

செய்திப்பிரிவு

மதுரை: மனிதர்களிடையேயான உரை யாடல் குறைந்துவிட்டது என்று நூல் அறிமுக விழாவில் முன்னாள் தலைமைச் செயலர் வெ.இறையன்பு தெரிவித்தார்.

மதுரை தியாகராசர் கல்லூரியில் முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு எழுதிய ‘என்ன பேசுவது, எப்படிப் பேசுவது’ என்ற நூல் அறிமுக விழா நடந்தது. முனைவர் ஞா.சந்திரன் வரவேற்றார். தியாகராசர் கல்லூரிச் செயலாளர் ஹரி தியாகராசன் தலைமை வகித்து பேசினார். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மேலாண்மை இயக்குநர் க.சந்தானம் முன்னிலை வகித்தார். முனைவர் ந.முருகேச பாண்டியன் நூல் ஆய்வுரை வழங்கினார்.

பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் சிறப்புரை யாற்றினார். நூலாசிரியர் வெ.இறையன்பு ஏற்புரையில் பேசியதாவது: முந்தைய காலங்களில் மாணவர்கள் பேச்சுப் போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்று வந்தனர். ஆனால், இப்போது மாணவர்களை பேச்சு போட்டிக்கு அனுப்புவதைவிட, அவர்களை தேர்வுக்கு படிக்க வைத்து அதிக மதிப்பெண்கள் பெற்றால் போதும் என பள்ளி நிர்வாகத்தினரும், பெற்றோரும் நினைக்கின்றனர்.

நாளடைவில் மனிதர்களிடையே யான உரையாடலும் குறைந்துவிட்டது. குடும்ப உறுப்பினர்களிடையேகூட ஒருவருக்கொருவர் பேசுவது குறைந்து விட்டது. நண்பர்களுக்குள் நடக்கும் உரையாடல்கூட வெகுவாக குறைந்துவிட்டது. அனைத்தும் குறுந்தகவலாக மாறிவிட்டது. இவற்றையெல்லாம் பார்த்த போதுதான், இந்த நூலை எழுதும் சிந்தனை தோன்றியது. இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT