வாழ்வியல்

தோனி குடும்பத்தாருடன் இணைந்து தீபாவளி கொண்டாடிய ரிஷப் பந்த்

செய்திப்பிரிவு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி குடும்பத்தாருடன் இணைந்து தீபாவளியை இந்திய அணி வீரர் ரிஷப் பந்த் கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் உற்சாகமாகவும், கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் இந்த தீபாவளி பண்டிகையை இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த், தோனி குடும்பத்தாருடன் இணைந்கது கொண்டாடி உள்ளார்.

ரிஷப் பந்த் கடந்த ஆண்டு இறுதியில் நடந்த கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவர் உடல் நலம் தேறி வருகிறார். பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் அவர், நேற்று முன்தினம் தோனிகுடும்பத்தாருடன் தீபாவளியைக் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களிலும் அவர் பதிவு செய்துள்ளார்.

ரிஷப் பந்த், தோனி குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன.

SCROLL FOR NEXT