வாழ்வியல்

ஒரே கிராமத்தில் மருத்துவம் பயிலும் 10 பேருக்கு விருது @ திருச்சி

செய்திப்பிரிவு

திருச்சி: முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி, திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் திருப்பைஞ்ஞீலியில், அக்னிச் சிறகுகள் நண்பர்கள் குழு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நேற்று முன்தினம் நடைபெற்றன.

இதில், திருப்பைஞ்ஞீலி கிராமத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் பயின்று வரும் 10 பேருக்கு ‘மண்ணின் மருத்துவர்’ என்ற விருது வழங்கப்பட்டது. மேலும், திருப்பைஞ்ஞீலி கிராமத்தைச் சேர்ந்த விஞ்ஞானி வே.மாசிலாமணிக்கு ‘மண்ணின் மைந்தர்’ என்ற விருது வழங்கப்பட்டது.

மண்ணச்ச நல்லூர் வட்டாட்சியர் அருள் ஜோதி, காவல் ஆய்வாளர்கள் மண்ணச்ச நல்லூர் ரகுராமன், சமயபுரம் கருணாகரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். தொடர்ந்து, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஊர் முக்கியஸ்தர்கள் செல்வம், கண்ணன், ரவி, ஒன்றிய கவுன்சிலர் ஆறுமுகம் மற்றும் இளைஞர் குழு நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT