ரசிகரின் குடும்பத்துக்கு சூர்யா நேரில் ஆறுதல் 
வாழ்வியல்

சாலை விபத்தில் உயிரிழந்த ரசிகரின் குடும்பத்துக்கு நடிகர் சூர்யா நேரில் ஆறுதல்!

செய்திப்பிரிவு

சென்னை: சாலை விபத்தில் உயிரிழந்த ரசிகரின் குடும்பத்துக்கு நடிகர் சூர்யா நேரில் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர் எண்ணூரை சேர்ந்த சூர்யாவின் ரசிகர் அரவிந்த். சூர்யா ரசிகர் மன்ற உறுப்பினராகவும் அரவிந்த் இயங்கி வந்துள்ளார். அரவிந்த் உயிரிழந்த செய்தியை அறிந்ததும் நடிகர் சூர்யா, அவரது வீட்டுக்கு நேரடியாக சென்று, அவரது குடும்பத்துக்கு தனது ஆறுதலை தெரிவித்துள்ளார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த அரவிந்தின் படத்துக்கு அஞ்சலியும் செலுத்தியுள்ளார். தற்போது இயக்குநர் சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ படத்தில் சூர்யா நடித்து வருகிறார்.

நடிகர் சூர்யா மற்றும் அரவிந்த்

சமூக முன்னேற்றம் சார்ந்த பல்வேறு நலத்திட்ட பணிகளை சூர்யா மேற்கொண்டு வருகிறார். அகரம் அறக்கட்டளையை நிறுவி கல்வி சார்ந்த உதவிகளை சூர்யா மேற்கொண்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT