திண்டுக்கல்: திண்டுக்கல் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் தயாரிக்கப்படும் பாக்கு மட்டை தட்டுகள் வெளிநாடுகளுக்கு, குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சுற்றுச்சூழலை காப்பதில் அந்நாடுகள் ஆர்வம் காட்டி வருவதே இதற்கு காரணம்.
இதற்காக மக்காத பாலித்தீன், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து, அதற்கு மாற்றாக மக்கும் தன்மையுள்ள பொருட்களை வெளிநாடு களில் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்படும் பாக்கு மட்டை தட்டுகளுக்கு, வெளிநாடுகளில் அதிக மவுசு ஏற்பட்டுள்ளது.
இத்தொழிலுக்கு முக்கியத் தேவை யான மூலப்பொருளான பாக்கு மட்டைகள் கேரளாவில் இருந்து வரவழைக்கப்படு கின்றன. இதை தண்ணீரில் ஊற வைத்து பின்னர் இயந்திரங்களில் உள்ள அச்சுகளில் சூடுபடுத்தி தகுந்த வடிவங்களில் பிரித்து எடுக்கின்றனர். இதன் தயாரிப்பு முறை எளிது. இருந்தபோதும், இந்த தொழிலில் சந்தை மேலாண்மை முக்கியம்.
திண்டுக்கல்லில் பல இடங்களில் பாக்கு மட்டை தயாரிப்போர் விற்பனை செய்கின்றனர். சிறுதொழிலாக பாக்குமட்டை தயாரிப் பவர்கள் திண்டுக்கல் மாவட்டம் மற்றும் அண்டை மாவட்டங்களில் மட்டும் சந்தைப் படுத்துகின்றனர். விற்பனை குறைவாக இருப்பதால் வருவாயும் குறைவாக உள்ளது.
ஆனால் பெரிய முதலீட்டில் தொழில் செய்பவர்கள் வெளிநாடுகளுக்கு பாக்கு மட்டை தட்டுகளை அனுப்பி வருகின்றனர். குறிப்பாக ஐரோப்பிய நாடுகள், ஜெர்மனி, இங்கிலாந்துக்கு கப்பல், விமானங்களில் அனுப்பப்படுகின்றன.
இதுகுறித்து இத்தொழிலில் ஈடுபட்டுள் ளவர்கள் கூறியதாவது: குறைவான ஆட்களை கொண்டே இந்த தொழிலை செய்யலாம். பெண் தொழிலாளர்கள் இந்த தொழிலில் அதிகம் இருக்கின்றனர். ஆனால் வியாபார நுணுக்கம் தெரிந்தால் தான் இந்த தொழிலில் நிலைத்து நிற்க முடியும் என்று கூறினர்.