வாழ்வியல்

கிருஷ்ண ஜெயந்தி | ஒடிசாவில் கண்ணனை கடல் மணலில் வடித்த சுதர்சன் பட்நாயக்!

செய்திப்பிரிவு

புரி: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பிரபல மணற் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒடிசா மாநிலம் புரி கடற்கரையில் உள்ள கரையோர மணலை பயன்படுத்தி கிருஷ்ணனை மணற் சிற்பமாக வடிவமைத்துள்ளார்.

முக்கிய தினங்களில் தான் பெற்ற கலையான மணற் சிற்பக் கலையை கொண்டு அந்த தினத்தை போற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளார் சுதர்சன் பட்நாயக். அந்த வகையில் ஜென்மாஷ்டமியை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கிருஷ்ணரின் சிலையை மணலில் வடிவமைத்துள்ளார் சுதர்சன் பட்நாயக்.

கிருஷ்ணரின் அவதார தினத்தை குறிப்பிடும் வகையில் கூடை ஒன்றில் குழந்தை வடிவில் கிருஷ்ணர் படுத்துள்ளது போல இந்த சிற்பத்தை அவர் வடிவமைத்துள்ளார். அதன் பின்னணியில் நிலவில் சந்திரயான்-3ன் விக்ரம் லேண்டர் இருப்பது போன்றும், மற்றொரு பக்கம் ஆதித்யா-எல்1 சூரியனின் வட்டப்பாதையில் செல்வது போன்றும் உள்ளது. அதை கிருஷ்ணர் பூமியில் பார்ப்பது போல உள்ளது. ஆன்மிகம் மற்றும் அறிவியலை தனது கலையில் அவர் இணைத்துள்ளார்.

SCROLL FOR NEXT