வாழ்வியல்

சித்திரக் கூடமாக மாறிய திண்டுக்கல் மாவட்ட சிறைச் சாலை!

பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட சிறைச் சாலையில் உள்ள கைதிகள், தங்களின் ஓவியத் திறமையை வெளிக்காட்ட சிறை நிர் வாகம் வாய்ப்பு கொடுத்ததையடுத்து, அங்குள்ள சுவர்களில் தத்ரூபமாக ஓவி யங்கள் வரைந்து அசத்தியுள்ளனர்.

திண்டுக்கல் நகரில் மாவட்ட சிறைச்சாலை உள்ளது. இதில் 200-க்கும் மேற்பட்ட விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைச்சாலை கண் காணிப்பாளராக மணிவண்ணன் உள்ளார். தவறுகள் செய்து சிறைக்கு வருபவர் களை நல்வழிப்படுத்தும் விதமாக, பல்வேறு முயற்சிகளை சிறை நிர்வாகம் எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கைதிகளின் ஓவியத் திறமையை வெளிப் படுத்த வாய்ப்பளித்தது.

இதை பயன்படுத்தி சிறைக்குள் உள்ள சுவர்களில் கைதிகள் தத் ரூபமாக ஓவியங்களை வரைந்து அசத்தியுள்ளனர். மாமல்லபுரம் கடற்கரை கோயில், ஓடும் குதிரை, புத்தர், நடனமாடும் பெண், கதக்களி நடனம், பறவைகள், படகு இல்லம், ராக்கெட் ஆகிய படங்களை பிர பல ஓவியர்கள் போல் வரைந்து ஆச்சரியப்படுத்தியுள்ளனர்.

கைதிகளை நல்வழிப்படுத்த: இது குறித்து திண்டுக்கல் மாவட்ட சிறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் இந்து தமிழ்திசை செய்தியாளரிடம் கூறியதாவது: கைதிகளை நல்வழிப்படுத்த சிறை நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக அரசு அறிவித்துள்ள திட்டப்படி நன்கொடையாளர்களிடம் இருந்து புத்தகங்கள் பெறப்பட்டு, திண்டுக்கல் சிறையில் தற்போது 2000-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.

விசாரணைக் கைதிகள் ஆர்வமுடன் புத்தகங்களை படிக்கின்றனர். ஈஷா யோகா மையம் மூலம் மனதை ஒரு நிலைப்படுத்தும் விதமாக அவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. இத்துடன் ஒவ்வொருவரின் தனித் திறமையை கண்டறிந்து அவற்றை வெளிக்கொணரும் விதமாக எடுக்கப் பட்ட முயற்சிதான் ஓவியம் வரைதல். பல கைதிகள் சிறைக்குள் இருக்கும் சுவர்களில் ஆர்வ முடன் ஓவியங்களை தீட்டினர்.

கைதேர்ந்த ஓவியர்கள் போல வரைவர் என நாங்கள் எண்ணவில்லை. அந்த அளவுக்கு சிறப்பாக வரைந்துள்ளனர். மீண்டும் தவறு செய்யாமல் நல்வழிப்படுத்தவே இந்த முயற்சி. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT