படம்: இன்ஸ்டாகிராம் 
வாழ்வியல்

வான்சுமந்த வெண்ணிலவ... தான்சுமந்த பெண்நிலவே... - மேக்ஸ்வெல் மனைவிக்கு வளைகாப்பு விழா!

செய்திப்பிரிவு

சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல்லின் மனைவி வினி ராமனுக்கு பாரம்பரிய முறைப்படி வளைகாப்பு விழா நடைபெற்றுள்ளது. விரைவில் பெற்றோர் ஆக உள்ள தம்பதியரை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

34 வயதான மேக்ஸ்வெல் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தனது காதலியை கரம் பிடித்து, இல்லற வாழ்வில் இணைந்தார். தற்போது வினி ராமன், கர்ப்பமாகியுள்ளார். அதனால் அவருக்கு பாரம்பரிய முறைப்படி வளைகாப்பு விழா நடத்தப்பட்டுள்ளது.

வினி ராமன், பிறந்தது மற்றும் வளர்ந்தது ஆஸ்திரேலிய நாட்டில்தான். அவரது பெற்றோர் இந்தியாவில் இருந்து அங்கு புலம் பெயர்ந்தவர்கள். 2017 முதல் மேக்ஸ்வெல் மற்றும் வினி ராமன் காதலித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது வளைகாப்பு நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட படங்களை வினி ராமன் பகிர்ந்துள்ளார். அதற்கு நெட்டிசன்கள் லைக்குகளும், கமெண்ட்டுகளும் செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT