வாழ்வியல்

போலீஸ் நாய் இருக்கு, போலீஸ் பூனை இருக்கா? - எலான் மஸ்க் ட்வீட்டுக்கு டெல்லி போலீஸ் ஜாலி பதில்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ட்விட்டரின் முன்னாள் சிஇஓ எலான் மஸ்கின் ட்விட் ஒன்றுக்கு டெல்லி போலீஸ் பதிலளித்துள்ளது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில், ”எனது மகன் லில் எக்ஸ் என்னிடம், போலீஸ் நாய்களை பார்த்த பிறகு, போலீஸ் பூனைகளும் உள்ளதா என கேட்டார்?” என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு டெல்லி போலீஸ் தனது ட்விட்டர் பக்கத்திலிருந்து எலான் மஸ்கின் ட்வீட்டை குறிப்பிட்டு, ”எலான் மஸ்க் உங்கள் மகனிடம் கூறுங்கள்... போலீஸ் பூனைகள் கிடையாது ஏனென்றால் அவை செய்த குற்றத்துக்காக, அவற்றின் மீது வழக்குப் பதிவு செய்யப்படலாம்” என்று பதிலளித்தது. இந்தப் பதிவில் ஆங்கில வார்த்தைகளை லாவகமாக டெல்லி போலீஸார் பயன்படுத்தி இருந்தனர். இதனால் இந்த ட்வீட் வைரலானது.

டெல்லி போலீஸார் விழிப்புணர்வு செய்திகளை சுவாரசியமாக வழங்குவதில் சமீப நாட்களாகவே நெட்டிசன்களின் பிரபலமாகி வருகிறார்கள்.

அவர்களின் சில பதிவுகள்:

SCROLL FOR NEXT