இந்தியா

மேற்கு வங்கத்தில் 2011-ல் பூஜ்ஜியம்... 2026-ல் பாஜக ராஜ்ஜியம்

செய்திப்பிரிவு

கொல்கத்தா: கடந்த 2011-ம் ஆண்டு மேற்​கு​ வங்க சட்​டப்​பேரவைத் தேர்​தலில் திரிண​மூல் காங்​கிரஸ் 184 தொகு​தி​களைக் கைப்​பற்றி முதல்​முறை​யாக ஆட்சி அமைத்​தது. அப்​போது காங்கிரஸ் 40 தொகு​தி​கள், கம்​யூனிஸ்ட் கட்​சிகள் 40 தொகு​தி​கள், இதர கட்​சிகள் 28 தொகு​தி​களைக் கைப்​பற்​றின. பாஜக​வுக்கு ஓரிடம் ​கூட கிடைக்​க​வில்​லை.

கடந்த 2016ம் ஆண்டு மேற்​கு​ வங்க சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திரிண​மூல் காங்​கிரஸ் 211 தொகு​தி​களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்​தது. அப்​போது காங்​கிரஸுக்கு 44, இடதுசாரி கட்​சிகளுக்கு 26, இதர கட்​சிகளுக்கு 10 இடங்​கள் கிடைத்​தன. பாஜக 3 தொகு​தி​களில் மட்​டும் வெற்றி பெற்​றது.

கடந்த 2019-ம் ஆண்டு மக்​கள​வைத் தேர்​தலின்​போது மேற்​கு​வங்கத்​தில் மொத்​த​முள்ள 42 தொகு​தி​களில் திரிண​மூல் 22 தொகுதி​களில் வெற்றி பெற்​றது. பாஜக 18 தொகு​தி​களைக் கைப்பற்றி ஆளும் கட்​சிக்கு அதிர்ச்சி அளித்​தது.

இதைத் தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு மேற்​கு ​வங்க சட்டப்பேர​வைத் தேர்​தலில் திரிண​மூல் காங்​கிரஸ் 215 தொகுதிகளில் வெற்றி பெற்று 3-வது முறை​யாக ஆட்சி அமைத்தது. பாஜக 77 பேர​வைத் தொகு​தி​களில் வெற்றி பெற்​றது.

தற்​போதைய சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் 207 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களைக் கைப்​பற்றி பாஜக அபார வெற்றி பெற்றிருக்கிறது. திரிண​மூல் காங்​கிரஸுக்கு 80 இடங்​கள் மட்டுமே கிடைத்​திருக்​கிறது. காங்​கிரஸுக்கு 2, மார்க்​சிஸ்ட் கட்சிக்கு ஓரிடம் மட்​டுமே கிடைத்​துள்​ளது. முதல்​முறை​யாக மேற்கு ​வங்​கத்​தில் பாஜக ஆட்​சி அமை​க்​கிறது.

SCROLL FOR NEXT