இந்தியா

மணிப்பூர் முதல்வராக யும்நம் கேம்சந்த் சிங் பதவியேற்பு

மோகன் கணபதி

இம்பால்/புதுடெல்லி: மணிப்பூர் முதல்வராக பாஜகவின் யும்நம் கேம்சந்த் சிங் இன்று மாலை பதவியேற்றார். அவருடன் இருவர் துணை முதல்வர்களாகவும், ஒருவர் அமைச்சராகவும் பதவியேற்றனர்.

முதல்வராக பொறுப்பேற்றுள்ள யும்நம் கேம்சந்த் சிங் மைதேயி சமூகத்தைச் சேர்ந்தவர். துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள நெம்சா கிப்ஜென் குகி சமூகத்தைச் சேர்ந்தவர். மற்றொரு துணை முதல்வரான லோசி திக்கோ, நாகா பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். இவர்களோடு, கோவிந்ததாஸ் கொந்தவ்ஜம் என்பவர் மாநில உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

          

பதவியேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய 61 வயதான முதல்வர் யும்நம் கேம்சந்த் சிங், ‘‘மணிப்பூரில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கான ஒரு பெரிய பொறுப்பை பாஜக தேசிய தலைமை எனக்கு வழங்கியுள்ளது. நாங்கள் அனைத்து சமூகத்தினரின் விருப்பங்களையும் நிறைவேற்றியுள்ளோம். இனியும் நிறைவேற்றுவோம்’’ என தெரிவித்தார்.

முன்னதாக, புதிய அரசு பொறுப்பேற்ற உள்ளதை முன்னிட்டு மணிப்பூரில் அமலில் இருந்த குடியரசுத் தலைவர் ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்டது.

மணிப்​பூரில் கடந்த 2023 மே மாதம் மைதே​யி, குகி சமூகத்தினர் இடையே இனக் கலவரம் மூண்​டது. இதில் 260 பேர் உயி​ரிழந்​தனர். ஆயிரக்​கணக்​கானோர் இடம் பெயர்ந்​தனர். பல மாதங்​களாக வன்​முறை நீடித்​த​தால் கடந்த 2025 பிப்​ர​வரி​யில் பாஜகவை சேர்ந்த முதல்​வர் பிரேன் சிங் பதவி வில​கி​னார்.

இதையடுத்து மணிப்​பூர் சட்​டப்​பேரவை முடக்கி வைக்கப்பட்​டு, அம்​மாநிலத்​தில் குடியரசுத் தலை​வர் ஆட்சி அமல்​படுத்​தப்​பட்​டது. பிறகு இது மேலும் 6 மாதங்களுக்கு நீட்​டிக்​கப்​பட்​டது. மணிப்​பூரில் குடியரசுத் தலை​வர் ஆட்சி பிப்​ர​வரி 12-ம் தேதி முடிவுக்கு வர இருந்த நிலையில், தற்போது புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது.

SCROLL FOR NEXT