இந்தியா

உடுப்பி கடற்படை தளம் குறித்த தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிய இளைஞர் கைது

இரா.வினோத்

பெங்களூரு: கேரள மாநிலத்தை சேர்ந்த கொச்​சின் ஷிப் யார்டு கப்​பல் கட்​டும் நிறு​வனத்​தின் கிளை கர்​நாட​கா​வில் உள்ள உடுப்பி மல்பே கடற்​கரை​யில் செயல்​பட்டு வரு​கிறது. இங்கு நாட்​டின் கடற்​படைக்கு சொந்​த​மான கப்​பல் கட்​டும் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன.

இந்த கப்​பல் கட்​டும் தளம் குறித்த தகவல்​கள், புகைப்​படங்​கள் மற்​றும் வீடியோக்​கள் பாகிஸ்​தானில் உள்ள தீவிர​வாத அமைப்​புக்கு அனுப்​பப்​படு​வ​தாக கடந்த ஆண்டு நவம்​பரில் தகவல் வெளி​யானது. இதுகுறித்து கொச்​சின் ஷிப் யார்டு நிறு​வனம் அளித்த புகாரின்​பேரில் உடுப்பி போலீ​ஸார் தீவிர விசா​ரணை மேற்​கொண்​டனர். அதில் கொச்​சின் ஷிப் யார்டு நிறு​வனத்​தில் ஒப்​பந்த பணி​யாள​ராக பணி​யாற்​றும் சிலர் உளவாளி​களாக செயல்​பட்​டது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது. இதையடுத்து அவர்​களின் செல்​போன் எண்​கள், சமூக வலை​தளங்​களை போலீ​ஸார் ஆய்வு செய்​தனர்.

          

அதில் கிடைத்த தகவல்​களின் அடிப்​படை​யில் கடந்த நவம்​பரில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த ரோஹித் (23), சான்ட்ரி (26) ஆகிய இரு​வரை கைது செய்​தனர். அவர்​களிடம் நடத்​திய விசா​ரணை​யில், “குஜ​ராத்தை சேர்ந்த ஹிரேந்​திர குமார் அவர்​களுக்கு சிம் கார்டு வாங்கி போலி வாட்ஸ் அப் கணக்​கு​களை உரு​வாக்கி கொடுத்​தது தெரிய​வந்​தது. இதையடுத்து ஹிரேந்​திர குமாரை கைது செய்​தனர்.

அவரிடம் நடத்​திய விசா​ரணை​க்குப் பின் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த அலிப் இஸ்​லாம் (21) என்ற இளைஞரை கேரளா​வில் உள்ள இடுக்​கி​யில் நேற்று முன் தினம் கைது செய்​தனர். அவரை உடுப்​பிக்கு அழைத்து வந்து நேற்று நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தினர்.

அலிப் இஸ்​லாம் மேற்கு வங்க முகவரி​யில் அடை​யாள அட்டை வைத்​துள்ள போதும், அவர் வங்​கதேசத்தை சேர்ந்​தவ​ராக இருக்​கலாம் என போலீ​ஸார் சந்​தேகிக்​கின்​றனர். எனவே அவரை 7 நாட்​கள் காவலில்​ எடுத்​து வி​சா​ரித்​து வரு​கின்​றனர்​.

SCROLL FOR NEXT