மேற்கு வங்​க மாநில தலைமை தேர்தல் அதி​காரி மனோஜ் அகர்​வால்

 
இந்தியா

மேற்கு வங்கத்தில் அச்சுறுத்தல் காரணமாக தலைமை தேர்தல் அதிகாரிக்கு ஒய்-பிளஸ் பாதுகாப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மேற்கு வங்க தலைமை தேர்​தல் அதி​காரிக்​கான பாது​காப்பை மத்​திய அரசு அதி​கரித்​துள்​ளது.

நாட்​டின் பல மாநிலங்​களில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி (எஸ்​ஐஆர்) நடை​பெற்று வரு​கிறது. அதன்​படி மேற்கு வங்​கத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி நடை​பெற்று வரு​கிறது. இதற்கு ஆளும் திரிண​மூல் கட்சி எதிர்ப்பு தெரி​வித்து வரு​கிறது.

பணிச்​சுமை காரண​மாக வாக்​குச்​சாவடி நிலை அலு​வலர்​கள் தற்கொலை செய்து கொள்​வ​தாக முதல்​வர் மம்தா குற்றம்சாட்டியிருந்​தார். இந்​நிலை​யில், அம்​மாநில தலைமை தேர்தல் அதி​காரி மனோஜ் அகர்​வாலுக்கு அச்​சுறுத்​தல் இருப்பதாக மத்​திய உளவு அமைப்​பு​கள் எச்​சரிக்கை விடுத்துள்ளதாக மத்​திய அரசு வட்டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன.

இதையடுத்​து, அகர்​வாலுக்கு ஒய்​-பிளஸ் பாது​காப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்​சகம் கடந்த 26-ம் தேதி உத்​தரவு பிறப்பித்​துள்​ளது. இதன்​படி, சிஐஎஸ்​எப் விஐபி பாது​காப்​புப் பிரிவைச் சேர்ந்த ஆயுதம் ஏந்​திய 12 பேர் அகர்​வாலின் பாதுகாப்புப் பணியில் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளனர்​.

SCROLL FOR NEXT