எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின்

 
இந்தியா

19 ஆண்டுக்குப் பிறகு கொல்கத்தா திரும்பினார் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின்

செய்திப்பிரிவு

கொல்கத்தா: வங்​கதேசத்​தைச் சேர்ந்த மருத்​து​வர் மற்​றும் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின். இஸ்லாமியத்துக்கு எதிராக இவர் தொடர்ந்து எழுதி வந்ததால், வங்​கதேசத்​தில் இவருக்கு எதிர்ப்புகள் கிளம்​பின. கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டது.

இதையடுத்து ஐரோப்​பிய நாடு​கள், வட அமெரிக்​கா​வில் சில ஆண்​டு​கள் வசித்​தார். இவர் இந்​தி​யா​வில் தற்​காலிக தங்​கும் அனுமதி பெற்று மேற்​கு​ வங்​கம் கொல்​கத்​தாவுக்கு கடந்த 2004-ம் ஆண்டு வந்​தார்.

ஆனால் இவர் இஸ்​லாம் பற்றி தொடர்ந்து விமர்சித்து வந்​த​தால் இவருக்கு மேற்​கு​வங்​கத்​தி​லும் எதிர்ப்பு கிளம்​பியது.

அப்​போதைய மார்க்​சிஸ்ட் தலை​மையி​லான மேற்​கு​வங்க அரசு தஸ்லிமாவை வலுக்​கட்​டாய​மாக கொல்​கத்​தா​வில் இருந்து கடந்த 2007-ம் ஆண்டு வெளி​யேற்​றியது. இதனால் இவர் தற்​போது டெல்லி​யில் வசித்து வரு​கிறார்.

இந்நிலையில், கொல்​கத்​தா​வின் ரவீந்​திர சதனில், தீவிரவாதத்துக்கு எதி​ரான நிகழ்ச்சி ஒன்​றில் தஸ்​லிமா நஸ்​ரின் இன்று கலந்​து ​கொள்​கிறார். இந்த நிகழ்ச்​சி​யில் மேற்​கு​வங்க முதல்​வர் சுவேந்து அதி​காரி மற்​றும் பிரபல எழுத்​தாளர் சிர்ஷேந்து முக​பாத்​யாயா ஆகியோ​ரும் கலந்து கொள்​கின்​றனர். 19 ஆண்டுகளுக்குப் பிறகு தஸ்லிமா நஸ்ரின் கொல்கத்தா வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT