இந்தியா

தீவிரவாதத்தை உலக நாடுகள் சகித்துக் கொள்ளக் கூடாது: அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ரஷ்ய தலைநகர் மாஸ்​கோ​வில் நடை​பெற்ற ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்​பில் (எஸ்​சிஓ) உள்ள நாடு​களின் வெளி​யுறவுத்​துறை அமைச்​சர்​கள் கலந்​து​கொள்​ளும் கூட்​டம் நடை​பெற்​றது. இதில் மத்​திய அமைச்​சர் எஸ்​.ஜெய்​சங்​கர் கலந்​து​கொண்டு பேசி​ய​தாவது:

தீ​விர​வாதம், பிரி​வினை​வாதம், இனவாதம் ஆகிய மூன்று தீமை​களை எதிர்த்​துப் போரிட எஸ்​சிஓ அமைப்பு உரு​வாக்​கப்​பட்​டது. கடந்த சில ஆண்​டு​களாக உலகின் பல்​வேறு பகு​தி​களில் தீவிர​வாத அச்​சுறுத்​தல்​கள் அதி​க​மாகி விட்​டன.

தீவிர​வாதம் எந்​த வடி​வில் இருந்​தா​லும் நாம் அதை வேரறுக்​கவேண்​டும். தீவிர​வாதத்​துக்கு எதி​ராக நாம் சகிப்​புத்​தன்​மை​யைக் காட்​டக்​கூ​டாது.

தீவிர​வாதத்​தின் மீது பூஜ்ஜிய சகிப்​புத்​தன்​மையை நாம் காட்​டு​வது கட்​டாய​மாகும். இதிலிருந்து எந்த நாடும் வில​கிச் செல்​ல​வும் முடி​யாது. திரும்​பிப் பார்க்​க​வும் முடி​யாது. டெல்லி குண்​டு​வெடிப்பு சம்​பவத்​துக்​குப் பிறகு, தீவிர​வாதத்​துக்கு எதி​ராக எங்​களது மக்​களைப் பாது​காக்​கும் உரிமை உண்​டு.

தீவிர​வாதத்தை வேரறுக்க ஒன்​று​பட்டு செயல்​படு​வோம். மாறி வரும் உலகளா​விய நிலப்​பரப்​புக்கு ஏற்ப ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்​பை (எஸ்​சிஓ) நாம் மாற்​றியமைக்க வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

SCROLL FOR NEXT