மும்பை தாராவியில் உள்ள குடிசைப்பகுதி.

 
இந்தியா

மும்பை தாராவி மறுசீரமைப்பு திட்டத்துக்காக மக்களை வேறு பகுதிகளில் குடியமர்த்தும் பணி தொடக்கம்

செய்திப்பிரிவு

மும்பை: ​மும்பை தாராவி மறுசீரமைப்பு திட்​டத்​துக்​காக அப்​பகு​தி​யில் வசிக்​கும் மக்​களை வேறு பகு​தி​களில் குடியமர்த்​தும் பணி தொடங்​கப்​பட்டு உள்​ளது.

ஆசி​யா​வின் மிகப்​பெரிய குடிசைப் பகு​தி​யாக மும்பை தாராவி உள்​ளது. அங்கு சுமார் 2.39 சதுர கி.மீ. பரப்​பில் 10 லட்​சத்​துக்​கும் அதி​க​மாக மக்​கள் வசிக்​கின்​றனர். இதில் பெரும்பாலானோர் தமிழர்​கள் ஆவர்.

இந்த சூழலில் மகா​ராஷ்டிர அரசு சார்​பில் தாராவி மறுசீரமைப்பு திட்​டம் தொடங்​கப்​பட்டு உள்​ளது. அரசு, தனி​யார் பங்​களிப்பு திட்​டத்தின் மூலம் தாராவி முழு​மை​யாக மறுசீரமைக்​கப்பட உள்​ளது.

இதற்​காக தாராவி மறு சீரமைப்பு திட்ட கூட்டு நிறு​வனம் தொடங்​கப்​பட்டு உள்​ளது. இதில் அதானி குழு​மம் 80 சதவீத பங்​கு​களை​யும் மகா​ராஷ்டிர அரசின் குடிசை மறு​வாழ்வு ஆணை​யம் 20 சதவீத பங்​கு​களை​யும் வைத்​துள்​ளன. திட்​டத்​தின் மொத்த மதிப்​பீடு ரூ.95,790 கோடி ஆகும்.

இந்த திட்​டத்​தின்​படி தாரா​வி​யில் வசிக்​கும் மக்​களுக்கு 350 சதுர அடி​யில் நவீன வீடு​கள் இலவச​மாக கட்​டிக் கொடுக்​கப்பட உள்​ளன. கட்​டு​மான காலத்​தில் தற்​காலிக​மாக இடம்​பெயரும் தாராவி மக்​களுக்கு மாதாந்​திர உதவித் தொகை​யும் வழங்​கப்பட உள்​ளது.

இந்த சூழலில் மும்பை தாராவி மறுசீரமைப்பு திட்​டத்​துக்​காக அப்​பகு​தி​யில் வசிக்​கும் மக்​களை வேறு பகு​தி​களில் குடியமர்த்​தும் பணி தொடங்​கப்​பட்டு உள்​ளது. முதல்​கட்​ட​மாக செக்​டர் 6, சாகுநகர் பகு​தி​யில் வசிக்​கும் குடும்​பங்​களை வேறு பகு​தி​களில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்​கப்​பட்டு உள்​ளது.

அங்​கிருந்து சுமார் 900 பேர் படிப்​படி​யாக வெளி​யேற்​றப்பட உள்​ளனர். இதற்​காக நோட்​டீஸ் வழங்​கப்​பட்டு உள்​ளது. இதுகுறித்து மும்பை மாநக​ராட்சி அதி​காரி​கள் கூறிய​தாவது: தாராவி பகு​தி​களில் இருந்து வீடு​களை காலி செய்ய ரூ.15,000 உதவித் தொகை வழங்​கப்​படு​கிறது.

மேலும் ஒவ்​வொரு குடும்​பத்​துக்​கும் மாதம் ரூ.22,000 வாடகை படி வழங்​கப்பட உள்​ளது. பெரிய வீடு​களில் வசிக்​கும் குடும்​பங்​களுக்கு தலா ரூ.30,000 வரை வாடகை படி வழங்​கப்​படும்.

தாரா​வி​யில் கட்​டப்​படும் புதிய வீடு​களில் மக்​கள் குடியேறும்​வரை மாதந்​தோறும் வாடகைபடி வழங்​கப்​படும். வரும் 2028-ம் ஆண்​டுக்​குள் தாரா​வி​யில் 10,000 வீடு​கள் கட்​டப்​பட்டு பயனாளி​களிடம் ஒப்​படைக்​கப்​படும்.

வரும் 2032-ம் ஆண்டு ஜனவரிக்​குள் திட்​டப் பணி​களை முழு​மை​யாக நிறைவு செய்ய இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்டு உள்​ளது.

அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​கள் மட்​டுமன்றி பள்​ளி​கள், சமு​தாய நலக்​கூடங்​கள், பூங்​காக்​கள், மருத்​து​வ​மனை​கள், குழந்​தைகள் நல மையங்​கள், வணிக வளாகம், தொழிற்​பூங்கா உள்​ளிட்​ட​வை​யும் தா​ரா​வி​யில் அமைக்​கப்பட உள்​ளன. இவ்​வாறு மும்​பை மாநக​ராட்​சி அதி​காரி​கள்​ தெரி​வித்​துள்​ளனர்​.

SCROLL FOR NEXT