இந்தியா

விஜயவாடா கனக துர்கையம்மன் கோயிலில் நடனமாடி ரீல்ஸ் எடுத்த பெண்: தேவஸ்தானம் சார்பில் போலீஸில் புகார்

என். மகேஷ்குமார்

விஜயவாடா: ரீல்ஸ் மோகம் தற்​போது பலரை ஆட்​டிப் படைக்கிறது. கோயிலுக்கு செல்​பவர்​களும் ரீல்ஸ் எடுத்து சமூகவலைத் தளங்​களில் பரவ செய்​கின்​றனர்.

திருப்​பதி ஏழு​மலை​யான் கோயில் முன் இது​போன்று ரீல்ஸ் எடுப்​பவர்​கள் மீது தேவஸ்​தானம் சட்​டப்​படி நடவடிக்கை எடுப்​ப​தால், அங்கு தற்​போது யாரும் கோயில் முன் ரீல்ஸ் எடுப்​ப​தில்​லை.

ஆனால், சமீபத்​தில் பிரசித்தி பெற்ற விஜய​வாடா கனக துர்கையம்​மன் கோயில் முன்பு 7-வது தளத்​தில் அடை​யாளம் தெரி​யாத ஒரு இளம் பெண் 2 நிமிடங்​கள் நடன​மாடி அந்த ரீல்ஸை சமூக வலைத்​தளங்களில் வெளி​யிட்​டார்.

அது தற்​போது வைரல் ஆனதால், இதுதொடர்​பாக, கனகதுர்கையம்​மன் கோயில் நிர்​வாக அதி​காரி வி.கே. சிவா உத்தரவின்​பேரில், அதி​காரி​கள், விஜய​வாடா முதலா​வது போலீஸ் நிலை​யத்​தில் புகார் அளித்தனர். கோயில் சம்​பிர​தா​யங்​களை மீறி, கோயில் முன்பு ரீல்ஸ் எடுத்த அந்த பெண் மீது சட்​டப்​படி நடவடிக்கை எடுக்க வேண்​டும் என, அந்த புகாரில் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து யார் அந்த பெண்? என போலீ​ஸார்​ வி​சா​ரணை நடத்​தி வரு​கின்​றனர்​.

SCROLL FOR NEXT