இந்தியா

மும்பை: பாலியல் தொல்லையை எதிர்த்த பெண் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கொடூரம்

இடது கை துண்டாகி மருத்துவமனையில் அனுமதி

செய்திப்பிரிவு

மும்பை: ரயிலில் பாலியல் தொல்லை கொடுத்​தவரை எதிர்த்த இளம் பெண் கீழே தள்​ளி​விடப்​பட்​ட​தில் தனது இடது கையை இழந்​தார். இச்​சம்​பவத்​தில் ஈடு​பட்ட நபரை காவல் துறை​யினர் கைது செய்​துள்​ளனர்.

போரிவலியி​லிருந்து விரார் நோக்​கிச் சென்ற மும்பை புறநகர் ரயிலில் பாதிக்​கப்​பட்ட இளம் பெண் பயணித்​துள்​ளார். அப்​போது, அதே பெட்​டி​யில் இருந்த ஒரு நபர் அப்​பெண்​ணிடம் தொடர்ச்சியாக தவறான முறை​யில் நடந்​து​கொண்டு பாலியல் தொல்லை அளித்​துள்​ளார். கோபமடைந்த பெண் தனது செருப்பை அவர் மீது வீசி​ய​தால் வாக்​கு​வாதம் மூண்​டது. அங்கிருந்த பயணி​கள் தலை​யிட முயன்​றனர். ஆனால் அந்த நபர் திட்​டியபடியே தனது செருப்பை பெண் மீது வீசி​யுள்​ளார்.

குற்றவாளி கைது

ரயில் நைகான் நிலை​யத்தை அடைந்​த​போதும் வாக்​கு​வாதம் தொடர்ந்​தது. அப்​போது, ஆத்​திரமடைந்த அந்த நபர் பெண்ணை ரயி​லில் இருந்து கீழே தள்​ளி​விட்​டுள்​ளார். இரு பெட்​டிகளுக்கு இடையி​லான இடைவெளி​யில் விழுந்த அப்​பெண், மீண்​டும் நடைமேடைக்கு ஏற முயன்​றார்.

ஆனால், அதற்​குள் ரயில் நகரத் தொடங்​கிய​தால் அவரது இடது கை சக்​கரங்​களுக்கு இடையே சிக்​கித் துண்​டானது. மேலும், அவரது தலை​யில் பலத்த காயம் ஏற்​பட்டு 16 தையல்​கள் போடப்பட்​டன. சம்பவ இடத்​தில் நில​விய பதற்​றத்​தைப் பயன்​படுத்​தித் தப்​பிய குற்​ற​வாளியை ரயில்வே காவல் துறை​யினர் சில மணி நேரத்​திற்​குள் கைது செய்​தனர்.

மருத்​து​வ​மனை​யில் தீவிர சிகிச்சை பெற்​று​வரும் அப்​பெண், “எனது வாழ்க்கை சீரழிந்​து​விட்டது, எனக்​குக் கண்​டிப்​பாக நீதி வேண்​டும்” என உருக்​க​மாகக் கேட்​டுக்​கொண்​டுள்​ளார். இச்​சம்​பவத்​தில் காவல்​துறை​யினர் கொலை முயற்சி வழக்​கைப் பதிவு செய்​ய​வில்லை எனப் பெண்​ணின் குடும்பத்​தினர் குற்​றம் சாட்டினர். இதைத் தொடர்ந்​து, ரயில்வே காவல் துறை​யினர் உரிய சட்​டப்​பிரிவு​கள் விரை​வாகச் சேர்க்​கப்​படும்​ என உறுதியளித்​துள்​ளனர்​.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT