இந்தியா

உ.பி.யில் பானிபூரி சாப்பிட்ட பெண்ணின் தாடை உடைந்தது

செய்திப்பிரிவு

லக்னோ: உத்தர பிரதேசத்​தின் தாபி​யாபூர், கவுரி கிஷன்​பூர் கிராமத்தை சேர்ந்​தவர் சேர்ந்​தவர் இன்​கிலா தேவி. அண்​மை​யில் அவர் அவுரையா பகு​தி​யில் உள்ள சாலை​யோர கடைக்கு சென்​றார். அங்கு பானிபூரியை வாங்கி ருசித்து சாப்​பிட்​டார். அப்​போது பானிபூரி மீதான ஆசை​யில் ஒரே நேரத்​தில் ஏராள​மான பானிபூரி​களை அவர் வாயில் திணித்​தார். எதிர்​பா​ராத​வித​மாக அவரது தாடை உடைந்​து, தாங்க முடி​யாத வலி ஏற்​பட்​டது.

இதைத் தொடர்ந்து அவர் மாவட்ட அரசு மருத்​து​வ​மனைக்கு சென்​றார். அவரது தாடையை சரி செய்ய மருத்​து​வர்​கள் தீவிர முயற்சி செய்​தனர். ஆனால் பலன் இல்​லை.

இதுதொடர்​பாக உத்தர பிரதேச மருத்​து​வர்​கள் மனோஜ் கு​மார், சத்​ரு​கன் சின்ஹா ஆகியோர் கூறிய​தாவது: பானிபூரி சாப்​பிடும் ஆசை​யில் இன்​கிலா தேவி வாயை மிக​வும் பெரி​தாக திறந்​திருக்​கிறார். இதில் தாடை வில​கி​விட்​டது. எங்​களது மருத்​து​வ​மனை​யில் தாடை சீரமைப்பு அறுவை சிகிச்​சைக்​கான வசதி​கள் இல்​லை. எனவே மத்திய பிரதேசத்தில் உள்ள சிச்​சோலி மருத்​து​வக் கல்​லூரிக்கு செல்ல அறி​வுறுத்தி உள்​ளோம்.

உணவு சாப்​பிடும்​போது நிதான​மாக, மெது​வாக சாப்​பிட வேண்​டும். அளவுக்கு அதி​க​மாக வாயை பெரி​தாக திறந்​தால் தாடை​யில் பிரச்​சினை​கள் ஏற்பட வாய்ப்​பிருக்​கிறது. இவ்​வாறு அவர்கள் தெரி​வித்​தனர்​.

SCROLL FOR NEXT