கைது செய்யப்பட்ட பெண்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் தீவிரவாத எதிர்ப்பு படை (ஏடிஎஸ்) அதிகாரிகள் கூறியதாவது: ஜெய்ப்பூரில் தேச விரோத சக்திகளுடன் தொடர்பில் இருந்த கதிஜா என்கிற பபிதா தாகத் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது வாட்ஸ்- அப், ஃபேஸ் புக் உள்ளிட்ட சமூக ஊடக கணக்குகளை ஆய்வு செய்ததில் ஜெய்ஷ்-இ-முகம்மது மற்றும் பிற தீவிரவாத அமைப்புகளுடன் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. பாகிஸ்தானின் முஃப்தி ஒருவரின் தொலைபேசி வழிகாட்டுதலின்படி இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக அந்தப் பெண் கூறினார். இது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.