இந்தியா

பிஆர்எஸ் எம்.பி. பண்டி பார்த்தசாரதிக்கு ரூ.5,300 கோடி மதிப்பில் சொத்து

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ​ஜனநாயக சீர்​திருத்​தங்​களுக்​கான சங்​கம்​(ஏடிஆர்) வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யுள்​ள​தாவது: மாநிலங்​களவை​யில் உள்ள 233 எம்​.பி.க்​களில் தற்​போதுள்ள 229 எம்​.பி.க்​களில் 73 பேர் மீது கிரிமினல் வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ளன.

அவர்​களில் 36 பேர் மீது கடுமை​யான பிரிவு​களில் வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளன. ஒரு எம்​.பி. மீது ஒரு கொலை, 4 கொலை முயற்சி வழக்​கு, பெண்​கள் மீதான குற்​றங்​களில் ஈடு​பட்​ட​தாக 3 வழக்​கு​கள் பதி​வாகி​யுள்​ளன.

          

கட்​சி​வாரி​யாகப் பார்க்​கும்​போது, 99 பாஜக எம்​.பி.க்​களில் 27 பேர் மீதும், 28 காங்​கிரஸ் எம்​.பி.க்​களில் 12 பேர் மீதும், 13 திரிண​மூல் காங்​கிரஸ் எம்​.பி.க்​களில் 4 பேர் மீதும், 10 ஆம் ஆத்மி எம்​.பி.க்​களில் 4 பேர் மீதும் குற்​றவழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ளன. மேலும், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட், பிஆர்​எஸ் கட்​சிகளைச் சேர்ந்த தலா 3 எம்​.பி.க்​கள் மீது குற்ற வழக்​கு​கள் நிலு​வை​யில் இருக்​கின்​றன.

மேலும், மாநிலங்​களவை​யில் உள்ள எம்​.பி.க்​களில் 31 பேர் கோடீஸ்​வரர்​களாக உள்​ளனர். பிஆர்​எஸ் கட்​சி​யைச் சேர்ந்த பண்டி பார்த்​த​சா​ரதி ரெட்டி தனக்கு ரூ.5,300 கோடி சொத்து இருப்​ப​தாகத் தெரி​வித்​துள்​ளார்.

ஆம் ஆத்மி எம்​.பி. ரஜிந்​தர் குப்​தாவுக்கு ரூ.5,053 கோடி​யும், ஒய்​எஸ்​ஆர் காங்​கிரஸ் கட்​சி​யின் அல்ல அயோத்​தியா ராமிரெட்​டிக்கு ரூ.2,577 கோடி​யும் சொத்துகள் உள்ளன.

குறைந்த அளவு சொத்து வைத்​திருப்​பவ​ராக ஆம் ஆத்​மி​யின் சாந்த் பல்​பீர் சிங் உள்​ளார். அவருக்கு ரூ.3 லட்​சம் மதிப்​புள்ள சொத்து மட்​டுமே உள்​ளது. மணிப்​பூர் எம்​.பி. மகா​ராஜா சனஜோபா லெய்​ஷெம்​பாவுக்கு ரூ.5 லட்​சத்​துக்​கும், திரிண​மூல் காங்​கிரஸின் பிர​காக் சிக் பராய்க்​குக்கு ரூ.9 லட்​சத்​துக்​கும் சொத்து உள்​ளது. இவ்​வாறு ஏடிஆர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT