இந்தியா

“ஸ்டாலினிடம் ஆங்கிலம், உருது மொழியில் பேச கோருவீர்களா?” - நிருபர்களிடம் மெகபூபா முப்தி கேள்வி

செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்: ​காஷ்மீர் முன்​னாள் முதல்​வரும் மக்​கள் ஜனநாயக கட்​சி​யின் (பிடிபி) தலை​வரு​மான மெகபூபா முப்​தி, ஸ்ரீநகரில் நேற்று நிருபர்​களுக்கு பேட்டி அளித்​தார். அப்​போது அவர் காஷ்மீரி மொழி​யில் பேசி​னார். சில நிருபர்​கள் குறுக்​கிட்​டு, உருது மொழி​யில் பேசு​மாறு வற்​புறுத்​தினர்.

அப்​போது மெகபூபா முப்தி கூறும்​போது, “காஷ்மீரி மொழிக்கு மதிப்பு அளி​யுங்​கள். நமது மொழியைக் காப்​பாற்ற வேண்​டியது நமது கடமை. தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லினிடம் ஆங்​கிலம் அல்​லது உருது மொழி​யில் பேச கோரு​வீர்​களா?” என்று கண்​டித்​தார்.

பேட்டி முழு​வதும் காஷ்மீரி மொழி​யில் நிருபர்​களிடம் அவர் உரை​யாடி​னார். மெகபூ​பா முப்​தி கூறிய​தாவது: வங்​கதேசத்​தில் நடை​பெறும் வன்​முறை சம்​பவங்​கள் மிகுந்த மனவேதனை அளிக்​கிறது. இந்​தி​யா​விலும் காஷ்மீர் மக்​கள் மீதான தாக்​குதல் அதி​கரித்து வரு​கிறது.

பல்​வேறு மாநிலங்​களில் வாழும் காஷ்மீர் மக்​களின் பாது​காப்பை உறுதி செய்ய முதல்​வர் உமர் அப்​துல்​லா, அனைத்து மாநிலங்​களுக்​கும் அமைச்​சர்​கள் குழுவை அனுப்பி வைக்க வேண்​டும். அந்த மாநில அரசுகளு​டன் பேச்​சு​வார்த்தை நடத்தி காஷ்மீர் மக்​களின் பாது​காப்பை உறுதி செய்ய வேண்​டும். இவ்​வாறு மெகபூ​பா முப்​தி தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT