இந்தியா

‘டெல்லி காற்று மாசு பற்றி விவாதம் நடத்​தாதது ஏன்?’ - பிரியங்கா காந்தி கேள்வி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடாளு​மன்ற குளிர்​காலக் கூட்​டத் தொடர் நேற்று தொடங்​கியது. முன்​ன​தாக பிரதமர் மோடி கூறும்போது, ‘‘பிஹார் தோல்வி எதிர்க்கட்சிகளை தொந்​தரவு செய்​த​தாகத் தெரி​கிறது. விரக்தி மன நிலை​யில் இருந்து வெளியே வந்து அவர்​கள் பணி​யாற்ற வேண்​டும். நாடாளு​மன்​றத்​தில் அவர்​கள் நாடக​மாடு​கிறார்​கள்’’ என்றார்

இந்​நிலை​யில் பிரதமரின் பதிவுக்கு கருத்து தெரிவிக்க முடி​யாது என்று ராகுல் தனது எக்ஸ் பக்​கத்​தில் தெரி​வித்​துள்ள நிலை​யில் அதற்கு காங்​கிரஸ் பொதுச் செயலர் பிரி​யங்கா பதிலடி கொடுத்​துள்​ளார்.

பிரி​யங்கா காந்தி தனது எக்ஸ் பக்​கத்​தில் கூறும்​போது, “நா​டாளு​மன்​றத்தை நடக்க விடா​மல் எதிர்க்​கட்​சிகள் முடக்​கு​வ​தாக பிரதமர் மோடி கூறுகிறார். டெல்​லி​யில் காற்று மாசு, வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப் பணி (எஸ்​ஐஆர்) ஆகிய​வற்​றால் மக்​கள் வெகு​வாகப் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர்.

இதுகுறித்து நாம் நாடாளு​மன்​றத்​தில் விவாதம் நடத்​தலாமே. பின் வேறெதற்கு நாடாளு​மன்​றம் இருக்​கிறது. நாங்​கள் மக்​கள் பிரச்​சினை​களை வி​வா​திக்​கத்​தானே நா​டாளு​மன்​றத்​தில் கேள்வி கேட்​டோம். இது நாடகம் கிடை​யாது. நா​டாளு​மன்​றத்​தில்​ மக்​களுக்​காக பிரச்​சினையை எழுப்​பி பேசுகிறோம்​’’ என்​றார்​.

SCROLL FOR NEXT