புதுடெல்லி: பாஜகவின் செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி செய்தியாளர்களிடம் பேசியதாவது: ஸ்மித் மச்சாரின் துணிச்சல் இந்தியாவுக்குப் பெருமை அளிக்கும் நிகழ்வு. பிரதமர் நரேந்திர மோடி, உலக தலைவர்கள் மச்சாரின் துணிச்சலைப் பாராட்டியுள்ளனர்.
ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் அவரைப் பாராட்டாதது ஏன்? காங்கிரஸ் தலைமை அரசியல் காரணங்களுக்காக மச்சாரின் துணிச்சலைப் பாராட்டாமல் இருக்கிறது. ராகுல் காந்தி காசா விவகாரத்தில் வேதனை தெரிவித்தார், ஆனால் வாக்கு வங்கிக்குப் பயந்து இந்த விவகாரத்தில் பேசவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.