இந்தியா

தமிழகத்தில் என்டிஏ ஆட்சி: மேட்ரிஸ் - ஐஏஎன்எஸ் கருத்துக் கணிப்பில் தகவல்

மேற்கு வங்கத்தில் மம்தா!

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மேற்கு வங்​கத்​தில் முதல்​வர் மம்தா பானர்ஜி தலைமையி​லான திரிண​மூல் காங்​கிரஸ் கட்சி 4-வது முறை​யாக ஆட்​சி​யைத் தக்​கவைக்​கும். தமிழகத்​தில் அதி​முக தலைமையிலான என்​டிஏ கூட்​டணி ஆட்​சி​யைப் பிடிக்​கும் என்று ‘மேட்​ரிஸ்​ - ஐஏஎன்​எஸ் நடத்​திய கருத்​துக் கணிப்​பில் தெரிவிக்கப்பட்​டுள்​ளது.

மேற்கு வங்​கத்​தில் மொத்​த​முள்ள 294 இடங்​களில், திரிண​மூல் காங்​கிரஸ் 155-170, பாஜக 100-115, மஜ்லிஸ் 5-6 இடங்​களை கைப்பற்​றும் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. மேற்கு வங்​கத்​தில் மம்தா பானர்ஜி மீண்​டும் முதல்​வ​ராகப் பொறுப்​பேற்​பார் என்று கணிக்கப்பட்​டாலும், இம்​முறை திரிண​மூல் காங்​கிரஸுக்​கும் பாஜக​வுக்​கும் இடையே கடுமை​யான போட்டி நில​வும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசி​யல் களம் குறித்து இக்​கருத்​துக் கணிப்பு வெளியிட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

          

தமிழகத்​தில் திமுக கூட்​ட​ணியை பின்​னுக்​குத் தள்​ளி, தேசிய ஜனநாயகக் கூட்​டணி (என்​டிஏ) ஆட்​சி​யைக் கைப்​பற்ற வாய்ப்புள்ள​தாக கணிக்​கப்​பட்​டுள்​ளது. தமிழகத்​தில் மொத்​த​முள்ள 234 இடங்களில் என்​டிஏ 114-127 இடங்​களை​யும், திமுக, 104 - 114 இடங்களை​யும், விஜய்​யின் தமிழக வெற்றி கழகத்​துக்கு 6 - 12 இடங்​களும் கிடைக்​கும் என்று கருத்து கணிப்பு கூறி​யுள்​ளது.

அசாமில் பாஜக பெரும்​பான்​மை​யான இடங்​களை வென்று ஆட்சியை தக்கவைக்க வாய்ப்​புள்​ள​தாகவும் கேரளாவில் இடது முன்னணி, காங்கிரஸ் கூட்டணி இடையே இழுபறி நீடிப்பதாக கருத்துகணிப்பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT