இந்தியா

மேற்கு வங்கத்தில் 11 வயது சிறுமி கூட்டு பாலியல் படுகொலை சம்பவம்: முக்கிய குற்றவாளி என்கவுன்ட்டரில் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்கு வங்​கத்​தில் 11 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்​யப்​பட்டு கொல்​லப்​பட்ட வழக்​கில் முக்​கிய குற்​ற​வாளி​ போலீஸ் என்​க​வுன்ட்​டரில் உயிரிழந்தார்.

மேற்கு வங்​கத்​தின் தெற்கு 24 பர்​கா​னாஸ் மாவட்​டம் பரூய்​பூர் பகுதியைச் சேர்ந்​தவர் பிர​பாஸ் மோண்​டல். இவர் கடந்த ஞாயிற்றுக்​கிழமை அப்​பகு​தியைச் சேர்ந்த 11 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி தனிமை​யான ஒரு இடத்​துக்கு அழைத்​துச் சென்​றுள்​ளார். பிறகு ஆனந்த் சர்​தார், திவாகர் சர்​தார் என்ற இருவருடன் சேர்ந்து சிறுமியை பிர​பாஸ் பாலியல் வன்​கொடுமை செய்​துள்​ளார். பிறகு சிறுமியை உயிருடன் ஒரு சாக்​குப் பையில் திணித்து அரு​கில் உள்ள குளத்​தில் வீசி​னார்.

உள்​ளூர் மக்​கள் பிர​பாஸை அடை​யாளம் கண்டு போலீ​ஸாரிடம் ஒப்​படைத்​ததை தொடர்ந்​து, சிறுமி​யின் உடல் குளத்​திலிருந்து மீட்கப்​பட்​டது. இதையடுத்து, குற்​ற​வாளி​களை விரைந்து கைது செய்​து, கடும் தண்​டனை வழங்க வலி​யுறுத்தி மக்​கள் போராட்டங்களில் ஈடு​பட்​டனர். இதையடுத்து மற்ற இரு குற்ற வாளி​களாக ஆனந்த் மற்​றும் திவாகரை போலீ​ஸார் கைது செய்தனர். விசா​ரணை​யில் மூவரும் குற்​றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.

இந்​நிலை​யில் குற்​றம் நிகழ்ந்த விதத்தை அறிந்து கொள்​ளும் நடவடிக்​கைக்​காக பிர​பாஸை சம்பவ இடத்​துக்கு போலீ​ஸார் நேற்று அதி​காலை​யில் அழைத்​துச் சென்​றனர். அப்​போது போலீஸாரை தாக்​கி​விட்டு பிர​பாஸ் தப்​பிச் செல்ல முயன்​ற​தாக கூறப்​படு​கிறது. அப்​போது நடந்த மோதலில் பிர​பாஸ் சுட்​டுக்​கொல்​லப்​பட்​டார். மேற்கு வங்​கத்​தில் சுவேந்து அதி​காரி தலைமையி​லான பாஜக அரசு பதவி​யேற்ற பிறகு நிகழ்ந்த முதல் என்​க​வுன்ட்​டர் சம்​பவம் இது​வாகும்.

உடலை ஏற்க மறுப்பு

இந்​நிலை​யில் பரூய்​பூர் மருத்​து​வ​மனை​யில் வைக்​கப்​பட்​டுள்ள பிர​பாஸ் உடலை பெற்​றுக்​கொள்ள அவரது தாயார் மறுத்துவிட்டார். “எனது மகன் செய்த தவறுக்கு அவனுக்கு தண்டனை கிடைத்​து​விட்​டது. அவன் உடலை நான் ஏற்​றுக்​கொள்ள மாட்​டேன். உங்​களுக்கு என்ன தோன்​றுகிறதோ அதைச் செய்​யுங்​கள். எனக்கு எந்த ஆட்​சேபனை​யும் இல்​லை” என்று போலீ​ஸாரிடம் பிர​பாஸின் தா​யார் கூறிய​தாக செய்​தி​கள்​ தெரிவிக்​கின்​றன.

SCROLL FOR NEXT