இந்தியா

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க நிலம்: மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி ஒப்புதல்

செய்திப்பிரிவு

கொல்கத்தா: ஊடுரு​வலை தடுக்க வங்​கதேச எல்​லை​யில் வேலி அமைப்​ப​தற்கு தேவை​யான நிலத்தை எல்லை பாது​காப்பு படைக்கு (பிஎஸ்​எப்) வழங்​க​ முதல் அமைச்​சரவை கூட்​டத்​தில் மேற்கு வங்க முதல்​வர் சுவேந்து அதிகாரி ஒப்​புதல் அளித்​தார்.

மேற்கு வங்​கத்​தின் புதிய முதல்​வ​ராக பாஜக.,​வின் சுவேந்து அதிகாரி கடந்த 9-ம் தேதி பொறுப்​பேற்​றார். இதையடுத்து முதல் அமைச்​சரவை கூட்​டம் கொல்​கத்​தா​வில் நேற்று நடை​பெற்​றது. இதில் அவருடன் பதவி​யேற்​றுக்​கொண்ட 5 அமைச்​சர்​களும் கலந்து கொண்​டனர். வங்​கதேச ஊடுரு​வல் பிரச்​சினையை மையமாக வைத்து தான் பாஜக தேர்​தல் பிரச்​சா​ரத்தை மேற்​கொண்​டது. இதனால் முதல் அமைச்​சரவை கூட்​டத்​திலேயே ஊடுரு​வலை தடுப்​ப​தற்​கான நடவடிக்​கைகள் மேற்கொள்ளப்பட்டன.

வங்​கதேச எல்​லை​யில் வேலி அமைப்​ப​தற்கு தேவை​யான நிலத்தை எல்லை பாது​காப்பு படைக்கு 45 நாட்​களுக்​குள் வழங்க ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டது. மேலும் மேற்கு வங்​கத்​தில் மக்​கள் தொகை கணக்​கெடுப்​புக்​கான பணியை உடனடி​யாக தொடங்கவும் ஒப்​புதல் வழங்​கப்​பட்​டது. அதன்​பின் முதல்​வர் சுவேந்து அதி​காரி அளித்த பேட்​டி​யில் கூறிய​தாவது: எல்​லைப்​புற மாவட்​டங்​களில் ஊடுரு​வல் அதி​கரிக்​கிறது.

இதனால் எல்​லை​யில் வேலி அமைப்​ப​தற்​கான நிலத்தை 45 நாட்களுக்​குள் எல்லை பாது​காப்புப் படை​யிடம் வழங்க அமைச்சரவை ஒப்​புதல் அளித்​தது. திரிண​மூல் காங்​கிரஸ் அரசு மக்​கள் தொகை கணக்​கெடுப்பு பணியை நிறுத்தி வைத்திருந்தது. அதற்கு ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டுள்​ளது. ஆசிரியர் வேலைக்கு விண்​ணப்​பிக்க 5 ஆண்டு வயது வரம்பு தளர்வு அளிப்போம் என தேர்​தல் வாக்​குறுதி அளித்​திருந்​தோம். அதற்​கும் தற்​போது அமைச்​சரவை ஒப்​புதல் அளித்​துள்​ளது. இவ்​வாறு அவர் கூறி​னார்​.

SCROLL FOR NEXT