கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் பிரமுகர் ஒருவருக்கு சொந்தமான குளத்தில் இருந்து பெருமளவு துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை அதிரடிப் படையினர் மீட்டுள்ளனர்.
இதுதொடர்பான உளவுத் தகவலின் பேரில் சந்தேஷ்காலி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று காலை மாநில காவல் துறையின் அதிரடிப் படை வீரர்கள் சோதனை மேற்கொண்டனர். அப்போது திரிணமூல் காங்கிரஸ் பிரமுகர் ராபின் தாஸுக்கு சொந்தமான ஒரு குளத்தில் இருந்து பெருமளவிலான துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்களைக் கைப்பற்றினர்.
இந்த சோதனைக்கு முன்பே ராபின் தாஸ், அவரது சகோதரர் கோபால் தாஸ் ஆகிய இருவரும் அப்பகுதியை விட்டு தப்பிவிட்டனர். அவர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர். இப்பகுதியில் கலவரம் ஏற்படுத்துவதற்காக இந்த ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.