இந்தியா

தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு உள்ளிட்ட 3 மசோதாக்கள் மீது இன்று வாக்கெடுப்பு

தமிழக எம்.பி. தொகுதி எண்ணிக்கை 39-ல் இருந்து 59 ஆக உயரும்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தொகுதி மறு​வரையறை தொடர்​பான 3 மசோ​தாக்​கள் மக்​களவை​யில் நேற்று தாக்​கல் செய்​யப்​பட்​டன. இந்த மசோ​தாக்​கள் மீது இன்று வாக்​கெடுப்பு நடத்​தப்பட உள்​ளது.

கடந்த 2023-ம் ஆண்​டில் மகளிர் இடஒதுக்​கீடு சட்​டம் நிறைவேற்​றப்​பட்​டது. இதன்​படி நாடாளு​மன்​றம், சட்​டப்​பேர​வை​களில் மகளிருக்கு 33 சதவீத இடங்​கள் ஒதுக்​கப்பட வேண்​டும். மகளிர் இடஒதுக்​கீடு சட்​டத்தை அமல்​படுத்த மக்​களவை​யில் தற்​போதுள்ள 543 இடங்​களை, 850 ஆக அதி​கரிக்க மத்​திய அரசு திட்​ட​மிட்டு உள்​ளது.

இதற்​காக நாடாளு​மன்​றத்​தின் சிறப்​புக் கூட்​டம் நேற்று தொடங்​கியது. முதல் நாளில் மகளிர் இடஒதுக்​கீடு சட்​டத்தை அமல்​படுத்​து​வதற்​காக அரசி​யல் சாசன திருத்​தம் (131-வது திருத்​தம்) மசோதா 2026, தொகுதி மறு​வரையறை மசோதா 2026 ஆகிய​வற்றை மத்​திய சட்ட அமைச்​சர் அர்​ஜுன் ராம் மேக்​வால் மக்​களவை​யில் அறி​முகம் செய்​தார். இதே​போல யூனியன் பிரதேச சட்​டங்​கள் (திருத்த ) மசோதா 2026-ஐ உள்துறை அமைச்​சர் அமித் ஷா மக்​களவை​யில் அறி​முகம் செய்​தார்.

இந்த 3 மசோ​தாக்​களுக்​கும் காங்​கிரஸ், சமாஜ்​வா​தி, திமுக உள்​ளிட்ட இண்டியா கூட்டணி கட்​சிகள் கடும் எதிர்ப்பு தெரி​வித்​தன. இவை தொடர்​பாக ஆளும் கூட்​ட​ணி, எதிர்க்​கட்​சிகள் இடையே சுமார் 40 நிமிடங்​கள் கடும் வாக்​கு​வாதம் நடை​பெற்​றது. இதைத் தொடர்ந்து மசோ​தாக்​களை விவாதத்துக்கு ஏற்​ப​தா, வேண்​டாமா என்​பது குறித்து வாக்​கெடுப்பு நடந்தது. மசோ​தாக்​களுக்கு ஆதர​வாக 251 பேரும், எதி​ராக 185 பேரும் வாக்​களித்​தனர். பெரும்​பான்மை வாக்​கு​களின் அடிப்​படை​யில் 3 மசோ​தாக்களும் மக்​களவையில் அதி​காரப்பூர்வ​மாக தாக்​கல் செய்​யப்​பட்​டன.

இதைத் தொடர்ந்து 3 மசோ​தாக்​கள் மீதான விவாதம் தொடங்​கியது. மத்​திய சட்ட அமைச்​சர் அர்​ஜுன் ராம் மேக்​வால் விவாதத்தை தொடங்​கி​வைத்​தார். அவர் கூறிய​தாவது: மகளிருக்​கான இடஒதுக்​கீட்டை சட்ட மேதை அம்​பேத்​கர், முன்​னாள் குடியரசுத் தலை​வர் அப்​துல் கலாம் உள்​ளிட்​டோர் வலி​யுறுத்​தினர்.

தற்​போது நாடாளு​மன்​றம், சட்​டப்​பேர​வை​யில் பெண்​களுக்கு 33 சதவீத இடஒதுக்​கீட்டை வழங்க ஏது​வாக புதிய மசோ​தாக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்டு உள்​ளன. இதன்மூலம் அனைத்து மாநிலங்​களி​லும் 50 சதவீத எம்.பி. இடங்​கள் அதி​கரிக்​கப்​படும். 2029 மக்​கள​வைத் தேர்​தலின்​போது பெண்​களுக்கு 33 சதவீத இடஒதுக்​கீடு அமலாகும். இவ்​வாறு அவர் பேசினார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாவது: தமிழகத்தில் தற்போது 39 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்த எண்ணிக்கை 59 ஆக உயரும். அதே போல, கேரளாவில் 20-ல் இருந்து 30 ஆகவும், ஆந்திராவில் 25-ல் இருந்து 38 ஆகவும், தெலங்கானாவில் 17-ல் இருந்து 26 ஆகவும், கர்நாடகாவில் 28-ல் இருந்து 42 ஆகவும் அதிகரிக்கும். கடந்த ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா போன்றே தற்போதைய மசோதாவும் உள்ளது. எந்த மாற்றமும் செய்யவில்லை. ஒரு புள்ளிகூட கூடுதலாக சேர்க்கப்படவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

இண்டியா கூட்டணி எதிர்ப்பு: விவாதத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:

கவுரவ் கோகோய் (காங்கிரஸ்): மகளிர் இடஒதுக்​கீட்டை முழு​மனதோடு ஆதரிக்​கிறோம். ஆனால் மகளிர் இடஒதுக்​கீட்​டையும் மக்​களவை தொகுதி மறு​வரையறை விவ​காரத்​தை​யும் இணைத்து குழப்​பத்தை ஏற்​படுத்​தக்​கூ​டாது. மக்​கள்தொகை கணக்​கெடுப்பு முடியும் முன்​பாகவே மக்​களவை இடங்​கள் 850 ஆக அதி​கரிக்​கப்​படும் என்று எவ்​வாறு முடிவு எடுக்​கப்​பட்​டது?

தேஜஸ்வி சூர்யா (பாஜக): மறு​வரையறை​யில் தென்​மாநிலங்​களுக்​கான இடங்​கள் குறை​யும் என்று தவறான தகவல்​ பரப்​பப்​படு​கி​றது. அனைத்து மாநிலங்​களுக்​கும் 50 சதவீத இடங்​கள் அதி​கரிக்​கப்​படும்.

அகிலேஷ் யாதவ் (சமாஜ்​வாதி): மகளிர் இடஒதுக்​கீட்டை அமல்படுத்துவதை முழு​மனதோடு வரவேற்​கிறோம். ஆனால் இந்த விவ​காரத்தை வைத்து பாஜக அரசி​யல் ஆதா​யம் தேட முயற்சி செய்​கிறது.

டி.ஆர்.பாலு (திமுக): 3 மசோ​தாக்​களும் சாண்ட்​விட்ச் மசோ​தாக்​கள் ஆகும். இந்த மசோ​தாக்​களை திமுக மிக கடுமை​யாக எதிர்க்​கும்.

அசாதுதீன் ஓவைசி (ஏஐஎம்​ஐஎம்): மக்​களவை​யில் தாக்​கல் செய்​யப்​பட்​டிருக்​கும் மசோ​தாக்​கள் நாட்​டின் கூட்​டாட்சி தத்​து​வத்​துக்கு எதி​ரானவை. இவ்வாறு அவர்கள் பேசினர். ஆளும் பாஜக கூட்​டணி சார்​பில் மத்​திய அமைச்​சர்​கள் அர்​ஜுன் ராம் மேக்​வால், அமித் ஷா, பிரதமர் மோடி உள்​ளிட்​டோர் அடுத்​தடுத்து பேசினர். அவர்​களுக்​கும் எதிர்க்​கட்சி எம்.​பி.க்​களுக்​கும்​ இடையே கார​சா​ர​மான வி​வாதம்​ நடைபெற்​றது. மக்​களவை​யில் இன்​றும் விவாதம் தொடர்​கிறது. விரிவான விவாதத்​துக்​குப் பிறகு மசோ​தாக்​கள் மீது இன்று மாலை 4 மணிக்கு வாக்​கெடுப்பு நடத்​தப்பட உள்​ளது.

மூன்றில் 2 பங்கு ஆதரவு தேவை: மகளிர் இடஒதுக்​கீட்டை அமல்படுத்த 3 மசோ​தாக்​கள் மக்​களவை​யில் தாக்​கல் செய்​யப்​பட்டுள்​ளன. இந்த மசோ​தாக்​களை நிறைவேற்ற மூன்​றில் இரண்டு பங்கு எம்​.பி.க்​களின் ஆதரவு தேவை. மக்​களவை​யின் மொத்த பலம் 543 ஆகும். இதில் 3 இடங்​கள் காலி​யாக உள்​ளன. தற்​போது 540 எம்​.பி.க்​கள் மட்​டுமே உள்​ளனர். இதில் பாஜக தலை​மையி​லான ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணிக்கு 293 எம்.​பி.க்​களின் ஆதரவு உள்​ளது. எதிர்க்​கட்​சிகளிடம் 233 எம்.​பி.க்​கள் உள்​ளனர். மூன்​றில் இரண்டு பங்கு ஆதர​வின் அடிப்​படை​யில் மக்​களவை​யில் மசோ​தாக்​களை நிறைவேற்ற 360 எம்​.பி.க்​களின் ஆதரவு தேவை.

தற்​போதைய சூழலில் பாஜக கூட்​ட​ணிக்கு போதிய பெரும்​பான்மை இல்​லை. மாநிலங்​களவை​யின் மொத்த பலம் 245. இதில் ஒரு இடம் காலி​யாக உள்​ளது. அவை​யில் 244 எம்.​பி.க்​கள் மட்டுமே உள்​ளனர். இதில் பாஜக தலை​மையி​லான தே.ஜ. கூட்​ட​ணிக்கு 141 எம்.​பி.க்​கள் உள்​ளனர். எதிர்க்​கட்​சிகளிடம் 83 எம்.​பி.க்​கள் உள்​ளனர். மூன்​றில் இரண்டு பங்கு ஆதரவு என்ற வகை​யில்மசோ​தாக்​களை நிறைவேற்ற 163 எம்.​பி.க்​களின் ஆதரவு தேவை. மசோ​தாவை நிறைவேற்​றும் அளவுக்கு மாநிலங்​களவை​யிலும் பாஜக​வுக்கு பெரும்​பான்​மை இல்லை.

SCROLL FOR NEXT