பூகம்ப மீட்புப் பணி தொடர்பாக வெனிசுலா அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸுடன் ஆலோசனை நடத்திய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே. பாண்டியன்

 
இந்தியா

பூகம்பம் பாதித்த வெனிசுலாவில் மீட்புப் பணியில் வி.கே.பாண்டியன்

செய்திப்பிரிவு

கடந்த ஜூன் 24-ம் தேதி வெனிசுலா நாட்​டில் இரண்டு சக்​தி​வாய்ந்த பூகம்​பங்​கள் ஏற்​பட்​டன. இந்த பூகம்​பங்​களால் இது​வரை 3,800-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​துள்​ளனர். 16,700-க்​கும் மேற்​பட்​டோர் படு​கா​யங்​களு​டன் சிகிச்சை பெறுகின்​றனர். சுமார் 50,000-க்​கும் மேற்​பட்​டோரை காண​வில்​லை.

அமெரிக்​கா, இந்​தியா உட்பட 60-க்​கும் மேற்​பட்ட நாடு​கள், பன்​னாட்டு அமைப்​பு​கள், தன்​னார்வ தொண்டு நிறு​வனங்​கள் வெனிசுலா​வில் தீவிர மீட்​புப் பணி​யில் ஈடு​பட்டு வரு​கின்​றன.

ஒடி​சாவை சேர்ந்த முன்​னாள் ஐஏஎஸ் அதி​காரி வி.கே.​பாண்​டியன், பேரிடர் மீட்​புப் பணி​களை மேற்​கொள்​வ​தில் திறன் வாய்ந்​தவர். தமிழகத்​தின் மதுரையை பூர்வி​க​மாகக்கொண்ட இவர், பேரிடர் மீட்​புப் பணி​களுக்​காக சர்​வ​தேச அளவில் புகழ் பெற்று விளங்குகிறார்.

வெனிசுலா அதிபர் டெல்சி ரோட்​ரிக்​ஸின் சிறப்பு அழைப்​பின்​பேரில் வி.கே.​பாண்​டியன் தற்​போது வெனிசுலா​வில் முகாமிட்டு மீட்​பு, நிவாரண பணி​களில் தீவிர​மாக ஈடு​பட்டு வரு​கிறார்.

ஒடிசா மாநிலத்​தின் மேம்​பட்ட பேரிடர் மீட்பு நிவாரண மாதிரி​களை அடிப்​படை​யாகக் கொண்டு வெனிசுலா மீட்​புக் குழு​வினருக்கு அவர் பல்​வேறு ஆலோ​சனை​களை வழங்கி வரு​கிறார். குறிப்​பாக மீட்​புப் பணி​யில் ஈடு​பட்​டிருக்​கும் மருத்​துவ குழு​வினர் மற்​றும் நிவாரண உதவி​களை வழங்​கும் குழு​வினருடன் வி.கே.​பாண்​டியன் இணைந்து பணி​யாற்றி வரு​கிறார்.

வெனிசுலா அதிபர் டெல்சி ரோட்​ரிக்ஸை சில நாட்​களுக்கு முன்பு அவர் சந்​தித்​துப் பேசி​னார்.அப்​போது கடந்த 1999-ம் ஆண்​டில் ஒடி​சாவை அதிதீ​விர புயல் தாக்​கிய​போது மேற்​கொள்​ளப்​பட்ட நிவாரண பணி​கள் குறித்த அனுபவங்​களை வெனிசுலா அதிபருடன் அவர் பகிர்ந்து கொண்​டார்.

ஒடிசா முன்​னாள் முதல்​வர் நவீன் பட்​நாயக் ஆட்​சிக் காலத்​தில் உலகின் தலைசிறந்த பேரிடர் மீட்​பு, நிவாரண நடை​முறை​கள் உரு​வாக்​கப்​பட்​டன. இதன்​காரண​மாக புயல் உள்​ளிட்ட பேரிடர் காலங்​களில் ஒடி​சா​வில் உயி​ரிழப்​பு​கள் முழு​மை​யாக தவிர்க்​கப்​பட்​டன. பொருட்​சேதம் பெரு​மள​வில் குறைக்​கப்​பட்​டது. இதே நடை​முறை​களில் வெனிசுலா​வில் மீட்​பு, நிவாரண பணி​களை மேற்​கொள்ள அதிபர் டெல்​சிக்​கு, வி.கே.பாண்​டியன் முக்​கிய ஆலோ​சனை​களை வழங்​கி​னார்.

வெனிசுலா அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் மற்றும் குழுவினருடன் தீவிர ஆலோசனையில் வி.கே. பாண்டியன்.

ஐ.நா. சபை​யின் பேரிடர் தடுப்பு அமைப்பு (யுஎன்​டிஆர்​ஆர்), ஐ.நா. சபை​யின் ஆசியா பசிபிக் பொருளா​தார, சமூக அமைப்பு மற்​றும் உலக வங்கி ஆகிவை ஒடி​சா​வின் பேரிடர் மீட்பு பணி​களைப் பாராட்டி உள்​ளன. ஒடி​சா​வில் பேரிடர் மீட்​புப் பணி​களின்​போது தொழில்​நுட்​பங்​கள் முழு​மை​யாக பயன்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. மக்​கள் நலனுக்கு முன்​னுரிமை அளித்து நிவாரண முகாம்​கள் அமைக்​கப்​படு​வது வழக்​கம். இவற்றை முன்​மா​திரி​யாகக் கொண்டு வி.கே. பாண்​டியன் அளிக்​கும் ஆலோ​சனை​களின்​படி வெனிசுலா​வில் நிவாரண முகாம்​கள் அமைக்​கப்​பட்டு வரு​கின்​றன.

வெனிசுலா அதிபர் டெல்​சி,புட்​டபர்த்தி சாய்​பா​வின் தீவிர பக்​தர் ஆவார். அண்​மை​யில் அவர் இந்​தி​யா​வில் அரசு முறை பயணம் மேற்​கொண்​ட​போது புட்​டபர்த்​திக்கு நேரில் சென்று வழி​பாடு நடத்​தி​னார். புட்​டபர்த்தி சாய்​பா​பா​வின் போதனை​கள் குறித்​தும் அதிபர் டெல்​சி​யும், வி.கே. பாண்​டியனும் பரஸ்​பரம் ஆன்​மிக கருத்​துகளை பரி​மாறிக் கொண்​டனர்.

வெனிசுலா மீட்​புப் பணி​களில் இந்​திய ராணுவம் தீவிர​மாக ஈடு​பட்​டிருக்​கிறது. “ஆபரேஷன் அமிஸ்​டாட்” என்ற பெயரில் விமானங்​களில் வெனிசுலா​வுக்கு நிவாரண பொருட்​கள் அனுப்​பப்​பட்டு உள்​ளன. இந்​திய ராணுவத்​தைச் சேர்ந்த மருத்​து​வர்​கள் உட்பட 41 மருத்​துவ பணி​யாளர்​கள் வெனிசுலா​வில் மருத்​துவ முகாம்​களை நடத்தி வரு​கின்​றனர். இந்​திய ராணுவத்​தின் “பீஷ்ம் க்யூப்” என்ற அவசர கால கூடார மருத்​து​வ​மனை​கள் வெனிசுலா​வுக்கு இலவச​மாக வழங்​கப்​பட்டு உள்​ளன.

இந்​திய ராணுவத்​தின் மனி​தாபி​மான உதவி​கள்​ மற்​றும்​ மருத்​துவ மு​காம்​களை வி.கே.​பாண்​டியன்​ நேரில்​ ​பார்​வை​யிட்​​டார்​. அங்​கு தன்​னலமின்​றி பணி​யாற்​றி வரும்​ இந்​திய வீரர்​களுக்​கு அவர்​ மன​தார ​பாராட்​டு​களை தெரி​வித்​​தார்​.

SCROLL FOR NEXT