இந்தியா

மே.வ மதரஸாக்களில் வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்குவது அரசியலமைப்பு சுதந்திரத்தை மீறும் செயல்: முஸ்லிம் தனிச்சட்ட வாரியம்

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலத்​தில் புதி​தாகப் பதவி ஏற்ற பாஜக முதல்​வர் சுவேந்து அதி​காரி, ‘மாநிலத்​தில் உள்ள அனைத்துப் பள்​ளி​கள், மதரஸாக்​களில், வந்தே மாதரம் பாடு​வது கட்​டா​யம்’ என்று அறி​வித்​தார்.

அதற்கு எதிர்ப்பு தெரி​வித்து அகில இந்​திய முஸ்​லிம் தனிச்​சட்ட வாரி​யத்​தின் தேசிய செய்​தித் தொடர்​பாளர் காசீம் ரசூல் இலியாஸ் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: ”மேற்கு வங்க மதரஸாக்​களில் நடை​பெறும் காலை நேரப் பிரார்த்தனை​யின் போது, வந்தே மாதரம் தேசி​யப் பாடலின் 5 சரணங்களை​யும் முழு​மை​யாகப் பாடு​வது கட்​டாய​மாக்​கப்​பட்டு உள்​ளது. இது மக்​களின் மத அடை​யாளத்​தை​யும், அரசியலமைப்புச் சுதந்​திரத்​தை​யும் மீறு​வது ஆகும்.

இதுபற்​றி, கேரள அரசை எதிர்த்து விஜய் இமானுவேல் என்​பவர் தொடுத்த வழக்​கில், தேசிய அல்​லது மத நிகழ்ச்​சிகளில் பங்கேற்க எந்​தவொரு குடிமக​னை​யும் கட்​டாயப்​படுத்த முடி​யாது என்று உச்ச நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​துள்​ளது. அதற்கு முரணாக மேற்கு வங்க அரசின் இந்த உத்​தரவு அமைந்​துள்​ளது. எனவே, மேற்கு வங்க முதல்​வர் சுவேந்து அதி​காரி, தனது முடி​வைத் திரும்பப் பெற வேண்​டும்.

வந்தே மாதரம் பாடலின் சில சரணங்​களில் இடம்​பெற்​றுள்ள கருத்துக்​கள், இஸ்​லாமியக் கொள்​கை​யான தவ்​ஹீத் எனும் ஏகத்து​வத்​துக்கு முரணானவை. எனவே, முஸ்​லிம் மாணவர்​களை அந்​தப் பாடலைப் பாடு​மாறு கட்​டாயப்​படுத்​து​வது, அவர்​களின் மத அடை​யாளத்​தை​யும் அரசி​யலமைப்​புச் சுதந்​திரத்​தை​யும் நேரடி​யாக மீறும் செய​லாகும். ஒரு மதச்​சார்​பற்ற நாட்​டில் ஒரு சமூகத்​தின் மதம் அல்​லது கலாச்​சார மரபு​களை மற்​றொரு சமூகத்​தின் மீது திணிக்​கக் கூடாது. இவ்​வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT