புதுடெல்லி: ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் (சிஆர்எஸ்) மேற்பார்வையின் கீழ் உள்நாட்டிலேயே வடிவமைக்கப் பட்ட படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலின் 180 கி.மீ. அதிவேக சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சோதனை கோட்டா- நாக்டா பிரிவில் நடைபெற்றது. இந்த வழித் தடத்தில் இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் மணிக்கு 180 கி.மீ.வேகத்தை எட்டியது. படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் எப்போது அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்பது குறித்த தகவலை ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.