காஷ்மீரின் செனாப் ரயில் பாலத்தில் நேற்று மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது.

 
இந்தியா

​காஷ்மீரின் செனாப் ரயில் பாலத்தில் 100 கி.மீ. வேகத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கம்

செய்திப்பிரிவு

ஜம்மு: காஷ்மீரின் செனாப் ரயில் பாலத்​தில் மணிக்கு 100 கி.மீ. வேகத்​தில் வந்தே பாரத் ரயில் நேற்று வெற்​றிகர​மாக இயக்​கப்​பட்​டது.

ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்​டத்​தில் பக்​கால் மற்​றும் கவுரி பகு​தி​களுக்கு இடையே செனாப் ஆற்​றின் குறுக்கே 1,178 அடி உயரத்​தில் ரயில்வே பாலம் கட்​டப்​பட்டு உள்​ளது. இது உலகின் மிக உயர​மான ரயில் பால​மாகும். கடந்த 2025-ம் ஆண்டு ஜூன் 6-ம் தேதி செனாப் ரயில் பாலத்தை பிரதமர் நரேந்​திர மோடி நாட்​டுக்கு அர்ப்​பணித்​தார்.

இதைத் தொடர்ந்து கடந்த ஏப்​ரல் மாதம் ஜம்மு - ஸ்ரிீநகர் இடையே வந்தே பாரத் எக்​ஸ்​பிரஸ் ரயில் சேவையை ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்​தார்.

பாது​காப்பு கருதி செனாப் ரயில் பாலத்​தில் மணிக்கு 75 கி.மீ. வேகத்​தில் வந்தே பாரத் ரயில் இயக்​கப்​பட்டு வந்​தது. பின்​னர் படிப்​படி​யாக ரயி​லின் வேகம் அதி​கரிக்​கப்​பட்டு வந்​தது. இந்த சூழலில் செனாப் ரயில் பாலத்​தில் வந்தே பாரத் ரயில் நேற்று மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் வெற்றிகரமாக இயக்கப்பட்டது.

SCROLL FOR NEXT