இந்தியா

ஆந்திராவில் வாஜ்பாய்க்கு 12 அடி வெண்கல சிலை

செய்திப்பிரிவு

அமராவதி: ஆந்​திர தலைநகர் அமராவ​தி​யில் உள்ள வெங்​க​டாபுரத்​தில் முன்​னாள் பிரதமர் வாஜ்​பாயின் பிறந்த நாள் மற்​றும் நூற்​றாண்டு விழாவை முன்னிட்டு, அவருக்கு 12 அடி உயரத்​தில் வெண்கல சிலை நேற்று நிறு​வப்​பட்​டது.

இதனை மத்​திய வேளாண் துறை அமைச்​சர் சிவ​ராஜ் சிங் சவுகான் மற்​றும் ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு ஆகியோர் திறந்து வைத்​தனர். பின்னர் இந்திய நாட்டுக்கு வாஜ்பாய் ஆற்றிய பணிகளை முதல்வர் சந்திரபாபு பாராட்டி பேசினார்.

SCROLL FOR NEXT