இந்தியா

இன்ஜினியரிங் படிக்காமலேயே பறக்கும் கார் உருவாக்கி அசத்திய உத்தராகண்ட் இளைஞர்

செய்திப்பிரிவு

டேராடூன்: ‘முயற்சி திரு​வினையாக்​கும்’ என்ற வள்​ளுவன் வாக்கு்ப்படி, உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்த ரவி தம்டா என்ற இளைஞர், எந்தவித முறை​யான பொறி​யியல் படிப்​பும் இல்​லாமல், இணை​யத்​தையும் தனது சொந்த அனுபவத்​தையும் பயன்​படுத்தி பறக்​கும் காரின் முன்​மாதி​ரியை உரு​வாக்கி சாதனை படைத்துள்ளார்.

பி.ஏ. பட்​ட​தா​ரியான ரவி, பேட்​டரி​யில் இயங்​கக்​கூடிய ஒற்றை இருக்கை கொண்ட தன்​னுடைய பறக்​கும் காருக்கு ‘ஹபிடா ஸ்கைனெக்ஸ்’ என பெயரிட்​டுள்​ளார். இந்த கார் கடந்த ஆகஸ்ட் மாதம் சோதனை ஓட்​டத்தை வெற்​றிகர​மாக நிறைவு செய்​தது. இந்த கார் ஓடு​பாதை இல்​லாமலேயே செங்​குத்​தாகப் புறப்​பட்​டுத் தரையிறங்​கும் திறன் கொண்​டது. இது ஒரு ட்ரோனைப் போல, மின்​ மோட்​டார்​, காற்றாடிகளை பயன்​படுத்து​கிறது. இருப்​பினும், இது வணிக ரீதி​யாகப் பயணிகளை ஏற்​றிச் செல்ல இன்​னும் சிறிது காலம் ஆகும்.

ரவி, உத்​தராகண்​டின் அல்​மோரா மாவட்​டத்​தில் மலைப் பகுதியிலுள்ள கஃப்லிகான் கிராமத்​தில் வளர்ந்​தார். அங்​குள்ள மலைப்​பாங்​கான நிலப்​பரப்பால் மருத்​துவ அவசரத் தேவைகளுக்கு நீண்ட மற்​றும் வளைந்து நெளிந்த பாதைகளில் பயணிக்க வேண்​டி​யிருந்​தது. இப்பிரச்​சினையைச் சமாளிக்க பறக்​கும் கார் யோசனை அவருக்கு உரு​வா்னது. கடந்த 2015-ல் இந்தக் கனவை நனவாக்​கும் பணி​யைத் தொடங்​கினார். ஆய்வகம் அல்​லது விலை​யுயர்ந்த உபகரணங்​கள் எது​வு்மின்றி இணை​யத்​தையே தனது வகுப்​பறை​யாக மாற்​றிக்​கொண்டு, பல வருட சோதனைகளுக்​குப் பிறகு இந்த மைல்​கல்லை எட்​டினார்.

முதல் முறையல்ல...

ரவி ஒரு தனித்​து​வ​மான கண்டுபிடிப்பை உரு​வாக்​கு​வது இது முதல்முறையல்ல. இதற்கு முன் அவர், செல்​போன் சார்ஜ் ஏற்​றும் காலணிகள், பார்​வையற்​றோருக்​கான ஸ்​மார்ட் ஸ்​டிக், மூங்​கில் வெட்​டும் கருவி, வனத்துறைக்​கான தீயணைப்பு உபகரணங்களை உரு​வாக்​கி​யுள்​ளார். முறை​யான கல்​வித்​தகுதியை விட கடின உழைப்​பும், புதி​யன படைக்​கும் ஆர்​வ​மும் இருந்​தால் சாதிக்​கலாம் என்​ப​தற்கு ரவி தம்டா மிகச்​சிறந்த உதாரணம்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT