இந்தியா

அமெரிக்க எம்.பி. கருத்துக்கு மத்திய அரசு கடும் கண்டனம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்​கு​முறை) ​திருத்​த மசோ​தா, 2026 தொடர்​பாக, அமெரிக்​க ​நா​டாளுமன்​ற உறுப்​பினர்​ தெரி​வித்​த கருத்​துக்​கு, இந்​தி​ய வெளியுறவு அமைச்சகம்​ கடும்​ கண்​டனம்​ தெரி​வித்​துள்​ளது.

இது தொடர்​பான சட்​ட ​விவகாரங்கள்​ “இந்​தி​யா​வின்​ உள்விவகாரங்​கள்​” என்​றும்​, அவை குறித்​து ​முடி​வெடு​ப்​​பது இந்திய ​நா​டாளுமன்​றத்​தின்​ அதிகாரத்துக்​கு உட்​பட்​டது என்​றும்​ அமைச்​சகம்​ தெரி​வித்​தது.

மத்​தி​ய அரசு வெளி​நாட்​டு பங்​களிப்​பு (ஒழுங்​கு​முறை) ​திருத்​த மசோ​தா (எஃப்​சிஆர்​ஏ), 2026, ​மார்​ச்​ ​மாதம்​ ​நா​டாளுமன்​றத்​தில்​ அறி​முகப்​படு​த்​தி​யது. இந்​த மசோ​தா குறித்​து, அமெரிக்​க ​நாடாளுமன்​ற உறுப்​பினர்​ ரைலி மூர்​ கடும்​ ​விமர்​சனம்​ செய்திருந்தா​ர்​. கடந்​த செவ்​வாயன்​று வெளி​யிட்​ட சமூக வலைதளப்​ ப​தி​வில்​ ரைலி மூர்​, “இந்​தத்​ ​திருத்​தங்​கள்​ நிறைவேற்றப்​பட்​டால்​, இந்​தி​ய அரசு தே​வால​யங்​கள்​ மற்​றும்​ மததொண்​டு நிறுவனங்​களை கையகப்​படு​த்​து​வதற்​கு வழிவகுக்கும்​.

இது கிறிஸ்​தவர்​களுக்​கு எ​தி​ரான தெளி​வான ​தாக்​குதல்​ ஆகும்​” என்​றும்​ அவர்​ குறிப்​பிட்​டிருந்​தா​ர்​. ரைலி மூரின்​ கருத்​துக்​கு மத்திய அரசு கடும்​ கண்​டனம்​ தெரி​வித்​துள்​ளது.இதுகுறித்​து, மத்தி​ய வெளி​யுறவு அமைச்​சக செய்​தித்​ தொடர்​பாளர்​ ரந்​திர்​ ஜெய்​ஸ்​வால்​ கூறுகை​யில்​, “எஃப்​சிஆர்​ஏ மசோ​தா தொடர்​பாக அமெரிக்​க எம்​.பி. ரைலி மூர்​ தெரி​வித்​த கருத்​துகளை ​நாங்​கள்​ கவனித்​துள்​ளோம்​. இந்​தி​யா தொடர்​பான சட்​ட விவ​காரங்​கள்​ எங்கள்​ உள்​விவ​காரங்​கள்​. அவை குறித்​து ​நாட்​டின்​ ​நாடாளுமன்றம்​தான்​ ​முடி​வெடு​க்​கிறது” என்​றார்​.

SCROLL FOR NEXT