இந்தியா

இந்திய மாணவர்களுக்கு வழங்கப்படும் அமெரிக்க கல்வி விசா 69% குறைந்தது

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்​திய மாணவர்​களுக்கு வழங்​கப்​படும் அமெரிக்க கல்வி விசா 69 சதவீதம் அளவுக்கு குறைந்து உள்​ளது.

கடந்த 2017 முதல் 2021-ம் ஆண்டு வரை அமெரிக்க அதிப​ராக ட்ரம்ப் பதவி​ வகித்தார். அப்​போது அமெரிக்​கா​வில் வசிக்​கும், பணி​யாற்​றும் வெளி​நாட்​டினர் மீது மிகப்​பெரிய நடவடிக்கை எடுக்​க​வில்​லை.

          

கடந்த ஆண்டு ஜனவரி​யில் ட்ரம்ப் 2-வது முறை​யாக அதிப​ராக பதவி​யேற்​றார். அப்​போது முதல் இந்​தி​யர்​கள் உள்​ளிட்ட வெளி​நாட்​டினர் மீது அவர் மிகக் கடுமை​யான நடவடிக்​கைகளை எடுத்து வரு​கிறார்.

அமெரிக்​கா​வில் சட்​ட​விரோத​மாக தங்​கி​யிருந்த சுமார் 2 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட வெளி​நாட்​டினர் நாடு கடத்​தப்​பட்​டனர். அமெரிக்​கா​வில் பணி​யாற்ற வழங்​கப்​படும் எச்1 பி விசா கட்​ட​ணம் ரூ.88 லட்​ச​மாக உயர்த்​தப்​பட்​டது. அமெரிக்​கா​வில் கல்வி பயில வெளி​நாட்டு மாணவர்​களுக்கு வழங்​கப்​படும் எப்1 விசா கட்​ட​ணம் இரு மடங்​காக அதி​கரிக்​கப்​பட்டு உள்​ளது. மேலும் விசா நடை​முறை​களும் கடுமை​யாக்​கப்​பட்டு உள்​ளன.

கடந்த 2018-ல் 26,506 இந்​திய மாணவர்​களுக்கு எப்1 விசாக்​கள் வழங்​கப்​பட்​டன. கடந்த 2019-ல் 26,247 விசாக்​கள் விநி​யோகிக்​கப்​பட்​டன. கரோனா தொற்று காரண​மாக கடந்த 2020-ம் ஆண்​டில் 114 இந்​திய மாணவர்​களுக்கு மட்​டுமே எப்1 விசா வழங்​கப்​பட்​டது.

கடந்த 2021-ம் ஆண்​டில் 40,194 பேர், 2022-ம் ஆண்​டில் 62,229 பேர், 2023-ம் ஆண்​டில் 72,027 பேர், 2024-ம் ஆண்​டில் 41,336 இந்​திய மாணவர்​கள் எப்1 விசாக்​களை பெற்​றனர். ஆனால் கடந்த 2025-ம் ஆண்​டில் 12,776 இந்​திய மாணவர்​களுக்கு மட்​டுமே எப்1 விசா வழங்​கப்​பட்​டிருக்​கிறது. கடந்த 2024-ம் ஆண்டை ஒப்​பிடும்​போது 2025-ம் ஆண்​டில் இந்​திய மாணவர்​களுக்கு வழங்​கப்​படும் அமெரிக்க கல்வி விசா 69 சதவீதம் வரை குறைந்து உள்​ளது.

தற்​போது அமெரிக்கா​வுக்கு மாற்​றாக பிரிட்​டன், ஜெர்​மனி, பிரான்ஸ் உள்​ளிட்ட ஐரோப்​பிய நாடு​களில் கல்வி பயில இந்​திய மாணவர்​கள் அதிக ஆர்​வம் காட்டி வரு​கின்​றனர் என்​று கல்​வி​யாளர்​கள்​ தெரி​வித்​து உள்​ளனர்​.

SCROLL FOR NEXT