இந்தியா

தொழிலதிபர் கவுதம் அதானி மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்தது அமெரிக்கா

செய்திப்பிரிவு

புதுடெல்லி: அ​தானி குழு​மத்​தின் தலை​வர் கவுதம் அதானி மற்றும் அவரது மரு​மகன் சாகர் அதானி ஆகியோர் மீதான அனைத்து கிரிமினல் குற்​றச்​சாட்​டு​களை​யும் அமெரிக்க நீதித்துறை நிரந்​தர​மாக ரத்து செய்​துள்​ளது.

அதானி குழுமம் இந்​தி​யா​வில் உள்ள சூரிய மின்​சக்தி திட்​டங்​கள் தொடர்​பாக முதலீட்​டாளர்​களுக்​குத் தவறான தகவல்​களை அளித்​த​தாகக் கூறி, அமெரிக்​கப் பத்​திரங்​கள் மற்​றும் பரிவர்த்​தனை வாரி​யம் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தது. இந்நிலை​யில், அமெரிக்க நீதித்​துறை​யானது நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்த மனு​வில், ‘‘இந்த வழக்கை நாங்​கள் விரி​வாக ஆய்வு செய்​தோம்.

தனிப்​பட்ட பிர​தி​வா​தி​களுக்கு எதி​ரான இந்​தக் குற்​றச்​சாட்​டு​களுக்​காக இனிமேலும் எங்​களது அரசுத் துறை வளங்​களை வீணடிக்க வேண்​டாம் என முடி​வெடுத்​துள்​ளோம். எனவே இந்த வழக்கை தள்​ளு​படி செய்​யக் கோரு​கிறோம்’’ என்று தெரி​வித்​தது.

இதை ஏற்​றுக் கொண்ட நீதி​மன்​றம், அதானி மற்​றும் பிறருக்கு எதி​ரான குற்​றச்​சாட்​டு​களை நிரந்​தர​மாகத் தள்​ளு​படி செய்து உத்​தர​விட்​டது. இதன்மூலம், அதானி குழு​மத்​திற்கு எதி​ராக அமெரிக்​கா​வில் நடந்து வந்த பல்​வேறு ஒழுங்​கு​முறை மற்​றும் சட்​டரீ​தி​யான விசா​ரணை​கள் அனைத்​தும் முழு​மை​யாக முடிவுக்கு வந்​துள்​ளன. இதன் காரண​மாக, மும்பை பங்​குச் சந்​தை​யில் நேற்று அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் கணிசமாக உயர்ந்தன.

SCROLL FOR NEXT