இந்தியா

மோடி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த சிஜேபிக்கு அமெரிக்காவில் இருந்து நன்கொடை: அமெரிக்க பாடகி மேரி மில்பென் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிரதமர் மோடி தலை​மையி​லான அரசுக்கு எதி​ராக போராட்​டம் நடத்​து​வதற்கு கரப்​பான் பூச்சி ஜனதா கட்​சிக்கு (சிஜேபி) அமெரிக்​கா​வில் இருந்து நன்​கொடை வழங்​கப்​படு​வ​தாக அந்​நாட்​டின் பிரபல பாடகி மேரி மில்பென் குற்​றம் சாட்​டி​யுள்ளார்.

இந்​தி​யா​வின் தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞனேஷ் குமாருக்கு எதி​ராக இண்​டியா கூட்​டணி மற்​றும் கரப்​பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நடத்தி வரும் போராட்​டங்​களின் பின்​னணி​யில் வெளி​நாட்டு சதி இருப்​ப​தாக பாஜக தலை​வர்​கள் குற்​றம் சாட்டி வருகின்​றனர். இந்​நிலை​யில், சிஜேபிக்கு அமெரிக்​காவைச் சேர்ந்த சிலர் நிதி அளிப்​ப​தாக அந்​நாட்​டின் பிரபல பாடகி மேரி மில்​பென் குற்​றம் சாட்​டி​யுள்​ளார்.

இது தொடர்​பாக அவர் சமூக வலைத்​தளத்​தில் வெளி​யிட்ட பதிவில் கூறி​யிருப்​ப​தாவது: அமெரிக்​காவை தளமாகக் கொண்ட நன்​கொடை​யாளர்​கள், தாங்​கள் இலக்​காகக் கொண்ட நாடு​களில் குழப்​பத்​தை​யும் அமை​தி​யின்​மை​யை​யும் ஏற்​படுத்​து​வதற்​காக ஒரு நடை​முறையைப் பின்​பற்றி வரு​கின்​றனர். அதன்​படி, அவர்கள் முதலில் பழமை​வாத உலகத் தலை​வர்​களை குறிவைப்பார்​கள்.

பின்​னர் அந்த நாட்​டைச் சேர்ந்த, அமெரிக்​கா​வில் கல்வி கற்ற ஒருவரைத் தேர்வு செய்து அவரை தீவிரப்​படுத்​து​வார்​கள். அதன் பிறகு அவரை மீண்​டும் அந்த நாட்​டுக்கு அனுப்​பி, குழப்​ப​மும் அழிவும் ஏற்​படுத்த நிதி​யளிப்​பார்​கள். இத்​தகைய சதித் திட்டங்கள் பெரும்​பாலும் தோல்​வியடைந்​தா​லும், அவை சம்பந்தப்​பட்ட நாடு​களின் வளர்ச்சி மற்​றும் நிர்​வாகத்​தில் பெரும் பாதிப்பை ஏற்​படுத்​துகின்​றன.

புதிய குரல்​கள் எழ வேண்​டும்

இந்​தி​யா​வின் ஆட்​சியை சீர்​குலைக்க வெளி​நாட்டு சக்​தி​கள் மேற்​கொள்​ளும் முயற்​சிகளை முறியடிக்க இந்​தி​யர்​கள் குரல் கொடுக்க வேண்​டும். இந்​திய இளம் தேசபக்​தர்​கள் எழுச்சி பெற வேண்​டும். இந்​திய மண்​ணில் பிறந்​து, வளர்ந்​து, கல்வி கற்ற புதிய குரல்​கள் இந்​தி​யா​வில் எழ வேண்​டும். அவர்​கள் ஒன்​றிணைந்​து, சிஜேபி​யின் சீர்​குலைவு மனப்​பான்​மைக்கு எதி​ராக அமை​தி​யான முறை​யில் போராட வேண்​டும். ஜனநாயகத்​தை​யும் சுதந்திரத்தையும் பாது​காக்க எப்​போதும் ஒரு எதிர் இயக்​கம் இருக்க வேண்​டும். இவ்​வாறு மேரி மில்​பென் கூறி​னார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT