இந்தியா

முதல்வர் விஜய்யை சந்திக்க நடைபயணம் தொடங்கிய உ.பி. இளைஞர்

செய்திப்பிரிவு

ஆதிலாபாத்: உத்​தரபிரதேச மாநிலம் அலிகரை சேர்ந்த அமன் என்ற 24 வயது இளைஞர், தமிழக முதல்வர் விஜய்யை சந்திப்பதற்காக அங்​கிருந்து தமிழ்​நாடு வரை நடைபயணம் மேற்கொண்​டுள்​ளார்.

கடந்த ஜூலை 3-ம் தேதி அலிகரில் தனது பயணத்தை தொடங்கிய அமன், சுமார் இரண்டு வாரத்​துக்கு பிறகு தெலங்கானா​வின் ஆதிலா​பாத் மாவட்​டத்தை நேற்று முன்​தினம் வந்​தடைந்​தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழ்​நாட்​டின் வளர்ச்சி மற்​றும் மக்​கள் நலன் சார்ந்த ஆட்​சிக்​காக முதல்​வர் விஜய்க்கு நேரில் வாழ்த்து தெரிவிக்க விரும்​பு​கிறேன்.

இது​போன்ற வளர்ச்சி சார்ந்த அணுகு​முறையை கொண்ட தலைவர்​கள் அதி​கம் உரு​வா​னால் இந்​தியா பயன்​பெறும். முதல்வர் விஜய் தேசிய அரசி​யலில் பங்​காற்ற வேண்​டும் என்று வலி​யுறுத்த விரும்​பு​கிறேன்” என்​று தெரிவித்தார். அமன் கடந்த 2025-ல் ஏஐஎம்​ஐஎம் தலை​வரும் ஹைத​ரா​பாத் எம்​.பி.​யு​மான அசாதுதீன் ஓவைசியை சந்​திக்க அலிகரில் இருந்து ஹைதராபாத்துக்கு நடைபயணம் மேற்​கொண்​டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல நகரங்​கள் மற்​றும் கிராமங்​களில் மக்​கள் தனக்கு உணவு, குடிநீர் மற்​றும் தற்​காலிக தங்​குமிடம் வழங்கி உதவியதுடன் பலரும் தன்னை ஊக்​கு​வித்​து, தனது பயணத்​தின் நோக்​கம் குறித்து கேட்​டறிந்​த​தாக குறிப்​பிட்​டார்.

SCROLL FOR NEXT