இந்தியா

‘அம்மா... ஜெயிச்சுட்டேன்...’ - அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற உ.பி. பெண்

செய்திப்பிரிவு

காஜியாபாத்: உத்​தர பிரதேசத்தை பூர்​வி​க​மாகக் கொண்ட சபா ஹைதர் 42), அமெரிக்க நாடாளு​மன்​ற் பிரதி​நி​தி​கள் சபை தேர்தலில் வெற்றிபெற்று எம்​பியாகி உள்​ளார்.

அமெரிக்க நாடாளு​மன்​றத்​தின் பிரதி​நி​தி​கள் சபையின் 435 இடங்களுக்​கும், செனட் சபையின் 35 இடங்​களுக்​கும் கடந்த 3-ம் தேதி பொதுத்​தேர்​தல் நடை​பெற்​றது. இந்த தேர்​தலில் இந்​திய வம்சாவளியைச் சேர்ந்த பலர் வெற்றி பெற்று எம்​பியாகி உள்ளனர். இதில் உத்​தர பிரதேசத்தை பூர்​வி​க​மாகக் கொண்ட சபா ஹைதரும் ஒரு​வர். அவர், பிரதி​நி​தி​கள் சபையின் இல்லினாய்ஸ் 84-வது தொகுதி​யில் வெற்றிபெற்று எம்​பியாகி உள்ளார்.

யார் இவர்?

உத்​தர பிரதேசத்​தின் காஜியாபாத்தை சேர்ந்த சபா ஹைதர் அங்குள்ள ஹோலி சைல்டு பள்​ளி​யில் பள்​ளிக் கல்​வியை நிறைவு செய்தார். அலிகர் முஸ்​லிம் பல்​கலைக்​கழகத்​தில் வனவிலங்குகள் அறி​வியலில் தங்​கப்​ப​தக்​கம் வென்​றார். அவரது கணவர், உத்​தர பிரதேசத்​தின் புலந்​தஷார் பகுதி​யைச் சேர்ந்​தவர். அமெரிக்​கா​வின் இல்​லினாய்ஸ் மாகாணம், அரோராவில் குடும்பத்​துடன் வசிக்​கும் சபா ஹைதர், யோகா பயிற்சியாளராகப் பணி​யாற்​றுகிறார்.

கடந்த 2022-ம் ஆண்​டில் அவர் டுபேஜ் கவுன்டி உள்​கட்​சித் தேர்தலில் போட்​டி​யிட்​டு 1,000 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் தோற்றார். 2024-ம் ஆண்டு உள்​ளாட்​சித் தேர்​தலில் வெற்றி பெற்றார். தற்​போது பிரதி​நி​தி​கள் சபையின் இல்​லினாய்ஸ் 84-வது தொகுதி​யில் ஜனநாயக கட்சி சார்பில் எம்​பியாகி உள்​ளார்.

வெள்​ளை​யின மக்​கள் பெரும்​பான்​மையாக உள்ள பகுதியில் வெற்றி பெற்​றிருப்​ப​தன் மூலம் தொகுதி​யின் முதல் தெற்​காசிய பெண் எம்பி என்ற பெரு​மையைப் பெற்​றுள்​ளார்.

‘அம்மா... ஜெயிச்சுட்டேன்...’

உத்​தர பிரதேசத்​தின் காஜியாபாத்​தில் வசிக்​கும் சபா ஹைதரின் தாய் ஷெஹ்​னாஸ் ஹைதர் பிடிஐ செய்தி நிறு​வனத்​துக்கு அளித்த பேட்​டி​யில்,‘‘வாக்கு எண்​ணிக்கை நடை​பெற்ற நாளின் இர​வில் நாங்​கள் தூங்​கவே இல்லை.

அடுத்தநாள் ​காலை 6.30 மணிக்கு சபா ஹைதரிடம் இருந்து போன் அழைப்பு வந்​தது. “அம்மா.. நான் ஜெயிச்​சிட்​டேன்” என்று அவள் கூறினாள். அப்​போது எனது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எனது முதிர் வயதிலும் நாற்காலியில் இருந்து எழுந்து துள்ளி குதித்​து​விட்​டேன்,’’ என்று கூறியுள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT